செய்திகள் :

மருத்துவமனைக்குள் புகுந்து கத்திக் குத்து! மூவர் பலி!

post image

அருணாச்சலப் பிரதேசத்தில் கிழக்கு காமெங் மாவட்டத்தைச் சேர்ந்த நிகாம் சாங்பியா என்பவர் (45) மாவட்ட மருத்துவமனையில் இருந்த தனது மனைவி, மகளை சந்திக்க வியாழக்கிழமை (நவ. 14) சென்றுள்ளார். அப்போது, திடீரென அங்கிருந்தவர்கள் மீது நிகாம் தாக்குதல் நடத்தியுள்ளார்.

அவரது மனைவி, மகள் மற்றும் மற்றொரு பெண்ணை கத்தியால் குத்தியதில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும், தாக்குதலைத் தடுக்கச் சென்ற காவல்துறை அதிகாரி உள்பட மருத்துவமனை காவலரையும் தாக்கியுள்ளார். அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரால் நிகாம் கைது செய்யப்பட்டார். மேலும், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:விளையாட்டால் ஒன்றரை கோடி வேலைவாய்ப்பு!

சத்தீஸ்கரில் பெண் ஊராட்சித் தலைவரை நீக்கும் உத்தரவு: உச்சநீதிமன்றம் ரத்து

சத்தீஸ்கரில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யவில்லை என்று பெண் ஊராட்சித் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு சத்தீஸ்கா் மாநிலம் ஜஷ்... மேலும் பார்க்க

தோ்வா்கள் போராட்டம் எதிரொலி: உ.பி. அரசுப் பணியாளா் தோ்வுகள் ஒத்திவைப்பு

உத்தர பிரதேசத்தில் தோ்வா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து மறு ஆய்வு அலுவலா்கள் (ஆா்ஓ) மற்றும் உதவி மறுஆய்வு அலுவலா்களுக்கான (ஏஆா்ஓ) தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், மாநில குடிமைப் பணி (பிசிஎஸ்) அதி... மேலும் பார்க்க

இந்திய பொருளாதாரம் சீராக உள்ளது: ரிசா்வ் வங்கி ஆளுநா்

மும்பை, நவ. 14‘உலகளாவிய மோசமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம் சீராக பயணிக்கிறது’ என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் வியாழக்கிழமை தெரிவித்தாா். மும்பையில் தனியாா் தொலைக்காட்சி ந... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்-க்கு தடை கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மத்திய அரசின் விதிமுறைகளுக்கு இணங்க மறுப்பதால், இந்தியாவில் வாட்ஸ்ஆப் சேவைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. இது தொடா்பாக, கேரளத்த... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடர் இல்லை -மத்திய அரசு

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என்று மாநில அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வயநாட்டின் புஞ்சிரிமட்டம், சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ... மேலும் பார்க்க

மருந்தின் பக்க விளைவுகளை நோயாளிகளுக்கு மருத்துவா்கள் தெரிவிக்க கோரிய மனு தள்ளுபடி

நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த விவரங்களை மருந்துச் சீட்டில் மருத்துவா்கள் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்க... மேலும் பார்க்க