முதல் முறை.. உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்!
Ilaiyaraja: 'மீண்டும் மலையாள திரையுலகில்...' - ஐக்கிய அமீரகத்தில் விருப்பம் தெரிவித்த இளையராஜா
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியிருப்பது தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் வைரல் ஆகி வருகிறது.
1976-ம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகம் ஆன இளையராஜா, இதுவரை தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் 7,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் 43-வது சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அந்தப் புத்தக கண்காட்சியில் 'புகழ் பெற்ற இசைக்கலைஞர் இளையராஜாவின் இசை பயணம்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அதில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா, "நான் மலையாள சினிமாவில் மீண்டும் இசையமைக்க ஆர்வமாக உள்ளேன். மலையாள திரையுலகில் இருந்து இசையமக்க அழைப்பு வந்தால், அதை ஏற்க தயாராக உள்ளேன்" என்று கூறியுள்ளார்.
அந்த விழாவில் புதிய இசையமைளார்கள் பற்றி கேட்டபோது, "அவர்கள் தங்களுக்கான தனி வழியில் முன்னேறி கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கட்டும்" என்று பேசியுள்ளார்.