செய்திகள் :

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்! நோயாளிகள் அவதி!

post image

மருத்துவா் மீதான கத்திக் குத்து தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் இன்று(நவ.14) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது புதன்கிழமை கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து விவகாரத்தைக் கண்டித்தும் பணியில் உள்ள மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறியும், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தையில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

இதையடுத்து, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அனைத்து மருத்துவ சங்கங்களும் தெரிவித்தனர்.

இதையும் படிக்க : சர்க்கரை நோய்! கண்டறிவதும் தடுப்பதும் எப்படி?

இருப்பினும், மருத்துவா் மீது முன்னெடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலை கண்டிப்பதற்காகவும், குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதற்காகவும், வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதற்காகவும் ஒருநாள் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுவதாக மருத்துவச் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், புறநோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற சிகிச்சைகள், மருத்துவ மாணவா்களுக்கான வகுப்புகள் ஆகியவை தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவு மட்டும் தொடர்ந்து செயல்படுகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 34 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 34 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நாளை(நவ. 15) இயங்காது என அறிவிப்பு!

புதுச்சேரியில் உள்ள ஜவாஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(ஜிப்மர்) நாளை (நவ. 15) இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி குருநானக் ஜெயந்தியையொட்டி மத்திய அரசு... மேலும் பார்க்க

நாளைமுதல் பணிக்கு திரும்புவோம்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு!

நாளைமுதல் பணிக்கு திரும்ப முடிவெடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் செந்தில் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் இன்று (நவ.14) ஒரு நாள் அடைய... மேலும் பார்க்க

19 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புடள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல... மேலும் பார்க்க

மதுரையில் சம்பவம்: சாலையில் தலை.. உடலைத் தேடும் காவல்துறை

மதுரையில் காவல்நிலையம் அருகே சாலையில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த தலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலையை வீசிச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையிலேயே த... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள்: உதயநிதி வேண்டுகோள்

தூத்துக்குடி: குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கப்பாண்டியன் இல்ல திருமண விழா தூத்த... மேலும் பார்க்க