எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
மதுரையில் சம்பவம்: சாலையில் தலை.. உடலைத் தேடும் காவல்துறை
மதுரையில் காவல்நிலையம் அருகே சாலையில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த தலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலையை வீசிச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையிலேயே தலை இருந்த நிலையில், தல்லாகுளம் காவல்துறையினர் விரைந்து வந்து தலையைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை திருப்பாலை காவல் நிலையம் அருகேயுள்ள வாசுநகர் எதிர்புறம் நத்தம் சாலையின் நடுவே 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையில் கிடந்துள்ளது.
காலை 7 மணி முதலே துண்டிக்கப்பட்ட தலை சாலையில் கிடந்த நிலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதனை வேடிக்கை பார்த்தபடி சென்றுள்ளனர்.
இதையும் படிக்க.. பாபா சித்திக் இறந்துவிட்டாரா? உறுதி செய்ய மருத்துவமனையில் காத்திருந்த கொலையாளிகள்!
இதனையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்களில் ஒருவர் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் காவல்துறையினர் சாலையில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த தலையை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
தலை அறுக்கப்பட்ட நிலையில் கிடப்பதால் கொலை செய்யப்பட்டு கிடந்தாரா ? இல்லை கொலை செய்யப்பட்ட பின்னர் தலை துண்டிக்கப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
அருகாமைப் பகுதிகளிலிருந்து காவல் நிலையத்துக்கு வந்த காணாமல் போன நபர்களின் விவரங்கள் குறித்து சேகரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை திருப்பாலை காவல்நிலையம் அருகே சாலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மோப்பநாய் உதவியுடன் தலை கிடந்த சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் உடலை தேடி வருகின்றனர்.