`கருணாநிதிக்கு பேரனாக இல்லாமல் இருந்தால், கவுன்சிலர் தேர்தலில்கூட..!'- உதயநிதியை...
Delhi Ganesh `சத்யா அவள் தாத்தாவை மிஸ் செய்வாள்'- ஆடுகளம் தொடர் நாயகி டெல்லி கணேஷ் மறைவுக்கு இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷின் மறைவு, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘ஆடுகளம்’ தொடரில் நடிகர் டெல்லி கணேஷ் நடித்துக் கொண்டிருந்தார். அந்தத் தொடரின் ப்ரொமோ சமீபத்தில் வெளியானது.
நடிகர் டெல்லி கணேஷின் மறைவையடுத்து, 'ஆடுகளம்' தொடரின் கதாநாயகி டெல்னா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ‘நான் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். அடுத்த செட்டியூலில் மறுபடியும் சந்திப்போம் என்று கூறியிருந்தீர்கள். இப்பவும் உங்களை சந்தித்த கடைசி நாள் எனக்கு நினைவில் இருக்கிறது. அன்று நீங்கள் மிகவும் சோர்வாக இருந்ததை பார்த்தேன். ஆனாலும், அதை நீங்க வெளிகாட்டி கொள்ளவே இல்லை. அப்போது உங்களுடைய பலத்தை பார்த்து வியந்தேன். இறுதியாக, இப்போது நீங்கள் ஓய்வு எடுத்துள்ளீர்கள். நிம்மதியாக உறங்குங்கள்!
பின் குறிப்பு - சத்யா எப்போதும் அவளுடைய தாத்தாவை மிஸ் செய்வாள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.