செய்திகள் :

`அமரன் படம் தவறாக சித்திரிக்கவில்லை; OTT-க்கு சென்சார்!' - சென்னையில் எல்.முருகன் பேச்சு

post image

கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக சென்னை எழும்பூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கலைப்புலி தாணு, இயக்குநர் செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின், செய்தியாளர் சந்திப்பில் எல்.முருகன், "சினிமாவுக்கான தீர்ப்பாயம் மும்பையில் தான் தற்போது உள்ளது. இந்த தீர்ப்பாயம் தென்னிந்தியாவில் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை ஏற்று சினிமா தீர்ப்பாயம் சென்னையிலோ அல்லது பெங்களூரிலோ கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓ.டி.டி-க்கு சென்சார் வேண்டுமென...

ஓ.டி.டி-க்கு சென்சார் வேண்டுமென கேட்கப்படுகிறது. அதற்கான புதிய ஒளிபரப்பு கொள்கை குறித்து மக்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டு வருகிறது. இது முடிந்தபிறகு, அனைத்து ஆலோசனைகளும் தொகுத்து சட்டமாக கொண்டுவரப்படும்" என்று பேசினார்.

அமரன் படம் குறித்து கேள்வி கேட்டபோது, "அமரன் படம் தவறாக சித்திரிக்கவில்லையே.. ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள். மிக முக்கியமாக, உண்மையை கூறியிருக்கிறார்கள். அந்த இயக்குநரையும், பட தயாரிப்பாளரையும் பாராட்ட வேண்டும்.

நாட்டு பற்று படம் அதிகம் வரவேண்டும். அதை ஊக்குவிப்பது அரசாங்கம் மற்றும் மக்களின் பொறுப்பு. அமரன் போன்ற நல்ல படங்களை, தேசபக்தி உள்ள படத்தை வரவேற்பது நாட்டின் மீது நமக்குள்ள மரியாதை ஆகும்" என்று பதில் அளித்துள்ளார்.

Keerthi Suresh: கீர்த்தி சுரேஷுக்குக் கல்யாணம் - நீண்ட நாள் பாய் ஃபிரண்ட் மாப்பிள்ளை ஆகிறார்!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட நாள் நண்பர் ஆண்டனி தட்டிலுக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது என கோலிவுட்டில் தகவல் பரபரக்கிறது. ’இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்... மேலும் பார்க்க

என்னை பாதித்த அசாமி திரைப்படம்... பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

"ரஜினி என்னை மூணு தடவை அடிச்சார்; இது நியாயமா?" - நடிகை விஜயசாந்தி அதிரடி பேட்டி

"'மன்னன்' படத்துல நான் நடிச்சப்போ ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன். இந்தியாவுல அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்ல அமிதாப் பச்சன் சார் முதலிடத்துலயும், ரஜினி சார் இரண்டாவது இடத்துலயும், ந... மேலும் பார்க்க

`ஜான்சி ராணி, நேதாஜி, சாவர்கர்' புதிய அவதாரத்தில் மீண்டும் சக்திமான் - முகேஷ் கண்ணா அறிவிப்பு!

சக்திமான்... 90-களில் பிறந்தவர்களுக்கு மறக்கமுடியாத தொடர்களில் ஒன்று. சக்திமான கதாபாத்திரத்தில் நடிகர் முகேஷ் கண்ணா நடித்திருப்பார். அந்தத் தொடர் மீண்டும் வெளியாக இருப்பதாக நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித... மேலும் பார்க்க

2025 கிராமி விருதுகளில் அதிக பிரிவுகளில் நாமினேஷன் ஆன கலைஞர்கள் - யார் யார்?

துரைத்துறையில் கொடுக்கப்படும் ஆஸ்கார் விருதுக்கு நிகரானது, இசை துறையை சார்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும் `கிராமி விருதுகள்’. 2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியலை தற்போது அறிவித்த... மேலும் பார்க்க