செய்திகள் :

``வயது என்பது வெறும் எண்தான்..." - நிரூபித்த 61 வயது உலக சாம்பியன் சுரேஷ்!

post image

`வயது என்பது வெறும் எண் மட்டும்... சாதிக்க, இலக்கை நோக்கி ஓட வயது தடையில்லை என 61 வயது பாடி பில்டர் நிரூபித்திருக்கிறார். கேரள மாநிலம் தெக்கேவிலவை பூர்வீகமாகக் கொண்டவர் எஸ்.சுரேஷ். KSRTC அரசு பணியில் இருந்த சுரேஷ் மே 2020-ல் ஓய்வுபெற்றார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் மிகுந்த ஆர்வமுடைய சுரேஷ், பணியில் இருக்கும்போதே வாரத்தில் மூன்றுநாள் பணியிலும் மீதமிருக்கும் 4 நாள்களில், நாளுக்கு இரண்டு முறை என ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவந்திருக்கிறார். அப்போதே, மிஸ்டர் கொல்லம், மிஸ்டர் கேரளா போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்றுவந்திருக்கிறார்.

சுரேஷ்

அதன் பலனாக தொடர்ந்து 15 ஆண்டுகள் மிஸ்டர் கொல்லம், ஐந்து முறை மிஸ்டர் கேரளா, 2022-ல் மிஸ்டர் ஆசியா சாம்பியன்ஷிப்பில், மிஸ்டர் இந்தியா, ரன்னர்-அப் உள்ளிட்ட இடத்தையும் வென்றுள்ளார். பணி ஓய்வு பெற்றப்பிறகு, தொடர்ந்து உடற்பயிற்ச்சியில் மட்டும் கவனம் செலுத்திவந்தார். இந்த நிலையில், இந்த ஆண்டு மாலத் தீவில் நடைபெற்ற உலக சாம்பியன், உடற்தகுதி விளையாட்டுப் போட்டியில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான மாஸ்டர் பிரிவில் உலகச் சாம்பியன் (World Bodybuilding and Physique Sports Championship) பட்டத்தை வென்றிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்தப் பேட்டியில், ``ஒரு போட்டிக்காக தயாராகிறேன் என்றால் ஒரு வேளைக்கு மூன்று மணி நேரம் என ஒரு நாளைக்கு இரண்டுமுறை உடற்பயிற்சி செய்வேன். அந்த நாள்களில், கார்போஹைட்ரேட்டுகளை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, தினமும் 40 முட்டைகளின் வெள்ளை கரு, 1 கிலோ கோழிக்கறியை 3 வேளை உணவாக எடுத்துக்கொள்வேன்.

சுரேஷ்

அந்தக் கோழி சமைக்க, உப்பை தவிர்த்துவிட்டு, மிளகு, மஞ்சள்தூள், இஞ்சியை மட்டுமே மசாலாவாக சேர்ப்பேன். போட்டி அல்லாத மற்றநாள்களில் வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்வேன். குறிப்பாக பழங்களை கூடுதலாக சேர்த்துகொள்வேன்." எனக் குறிப்பிட்டிருந்தார். இப்போது சுரேஷ் கொல்லத்தில் உள்ள ஆசிரமத்தில் ஜிம் பயிற்சியாளராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Newzealand: மசோதாவைக் கிழித்தெறிந்த மாவோரி இன எம்.பி; பழங்குடிப் பாடல் பாடி போராட்டம்! | Viral Video

நியூசிலாந்தின் 1853-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான வரலாற்றில், முதன்முறையாக 21 வயது இளம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹனா-ரவ்ஹிதி மைபி-கிளார்க். மாவோரி மக்களின் மொழி, நிலம் மற்றும் பா... மேலும் பார்க்க

Anmol: ``இந்த எருமையை ரூ.23 கோடிக்கு கேட்டார்கள்..'' - ராஜஸ்தான் கண்காட்சியில் வினோதம்!

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் சர்வதேச கால்நடை கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் பார்வைக்கும், விற்பனைக்கும் கொண்டுவரப்பட்டிருந்த ஒட்டகங்கள், எருமைகள், குதிரைகளைப் பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப்... மேலும் பார்க்க

Virat Kohli: "கொஞ்சம் நில்லுங்க ஒரே ஒரு செல்பி..." - ரசிகையின் அன்புத் தொல்லையில் விராட் | Video

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருப்பவர் வீராட் கோலி. டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த மாத இறுதி... மேலும் பார்க்க

``காருக்கு ஆயுள் முடிந்தது" - ரூ.4 லட்சம் செலவில் காருக்கு சமாதி... இறுதி ஊர்வலத்தில் 1500 பேர்..!

மக்கள் வளர்ப்பு பிராணிகள், தங்களது வாகனங்கள் மீது அதிக அன்பு வைத்திருப்பார்கள். திடீரென வளர்ப்பு பிராணிகள் இறந்துவிட்டால் அதனை சிலரால் தாங்கிக்கொள்ள முடியாது. அவ்வாறு இறந்து போகும் வளர்ப்பு பிராணிகளை ... மேலும் பார்க்க

Elon Musk : `வரும் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ சென்று விடுவார்...' - ஆரூடம் கூறும் எலான் மஸ்க்

சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், கமலா ஹாரிஸை எதிர்கொண்ட டொனால்ட் ட்ரம்ப், அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றார். இந்த வெற்றிக்குப் பின்னணியில் முக்கிய காரணமாக ட... மேலும் பார்க்க

உ.பி: கோயிலில் ஏ.சி-யிலிருந்து வெளியேறும் நீரை `தீர்த்தம்' என அருந்தும் பக்தர்கள்! - Viral Video

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவின் பிருந்தாவனில் பாங்கே பிஹாரி மந்திர் எனும் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, யானை தலை சிற்பத்தின் வாய் வழியே வழிந்த தண்ணீரை 'தீர்த்தமாக' பி... மேலும் பார்க்க