Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' - ட்ருங் மை லான்...
Elon Musk : `வரும் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ சென்று விடுவார்...' - ஆரூடம் கூறும் எலான் மஸ்க்
சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், கமலா ஹாரிஸை எதிர்கொண்ட டொனால்ட் ட்ரம்ப், அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றார். இந்த வெற்றிக்குப் பின்னணியில் முக்கிய காரணமாக டெஸ்லா நிறுவனரும், எக்ஸ் தள உரிமையாளருமான எலான் மஸ்க் இருந்தது உலகறிந்த செய்தி. இந்த நிலையில், ஜெர்மன் பத்திரிகையாளர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில், ``ஜெர்மன் சோசலிச அரசு கவிழ்ந்துவிட்டதால், விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு பதிலளித்திருந்த எலான் மஸ்க், ஜெர்மன் நிதித்துறை அமைச்சரின் பெயரான ஓலாஃப் ஸ்கோலை குறிப்பிட்டு, ``ஓலாஃப் ஸ்கோல் முட்டாள்" எனக் குறிப்பிட்டிருந்தார். ஓலாஃப் என்பது டிஸ்னியின் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்தப் பதிவைத் தொடர்ந்து எக்ஸ் பக்க பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் எலான் மஸ்கைச் சுட்டி, 'கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோவை பதவியிலிருந்து நீக்க உதவ வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு பதிலளித்த எலான் மஸ்க், ``அவர் வரவிருக்கும் தேர்தலில் சென்றுவிடுவார்" எனக் கணித்துக் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது அதற்கு முன்னதாக கனடாவில் பிரதமர் தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.