சேலம்: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை; வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்... அல்லல்பட...
கடல் பாறையில் அமர்ந்து யோகா செய்த ரஷ்ய நடிகை... ராட்சத அலையில் சிக்கி மரணம்..!
ரஷ்ய நாட்டின் பிரபல நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா. 24 வயதான இவர் தன் காதலனுடன் தாய்லாந்து சுற்றுலா சென்றிருக்கிறார். அலைகளை ரசிப்பதற்காக லாட் கோ வியூபாயின்ட்டுக்கு சென்று, சிறிது நேரம் யோகா செய்வதற்கு முயன்றிருக்கிறார்.
அவர் யோகா செய்வதை அங்கிருந்து ஒருவர் படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலை ஒன்று அடித்து, நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயாவை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அங்கு வீடியோ எடுத்துக்கொண்டிருந்த அந்த நபர், நடிகையை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது.
இது தொடர்பாக மீட்புப்படையினருக்கு தகவலளிக்கப்பட்டது. மீட்புக் குழுவினர், கடலின் சில கி.மீ தூரத்தில், நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயாவின் உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு அவர் தன் சமூகவலைதளப் பக்கத்தில், ``இந்தத் தீவு மிகவும் அழகாக இருக்கிறது. இந்தக் கடற்கரை நான் என் வாழ்வில் பார்த்த சிறந்த இடங்களில் ஒன்று. நான் இங்கு இருப்பதற்கு அனுமதித்த பிரஞ்சத்துக்கு நன்றி" எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.