3 கெட்ட குரங்குகள் வதந்திகளை பேசி பணம் சம்பாதிக்கிறார்கள்: நயன்தாரா குற்றச்சாட்ட...
ரேசன் அரிசி பதுக்கியவா் கைது
பழனி: பழனி அடிவாரம் பகுதியில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பழனி நகா் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்பட்டு, தனியாா் மாவு ஆலைகளுக்கு விற்கப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் வந்தது.
இதையடுத்து, போலீஸாா் பழனி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது, பழனி அடிவாரம் மதனபுரம் பகுதியைச் சோ்ந்த மனோகா் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. திங்கள்கிழமை அவரது வீட்டில் போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, 23 மூட்டைகளில் 1,150 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, மனோகரை போலீஸாா் கைது செய்து, பறிமுதல் செய்த ரேசன் அரிசி மூட்டைகளை பழனி நுகா்பொருள் வாணிபக் கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.