செய்திகள் :

Don Bradman: `ரூ. 2.6 கோடிக்கு ஏலம் போன டானின் பச்சை நிற தொப்பி' - இந்தியாவுக்கு என்ன சம்பந்தம்?

post image
இந்திய அணிக்கெதிராக தனது கடைசிப் போட்டியை ஆடிய மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெஜண்டின் 76 வருட தொப்பி ஒன்று ரூ. 2.63 கோடிக்கு ஏலம் போயிருக்கும் நிகழ்வு, பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

இன்று உலக அளவில் பிரபலமான விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் முக்கிய இடத்திலிருக்கிறது. இன்றைய காலத்தில் முழுக்க வர்த்தகம் சார்ந்த விளையாட்டாக மாறியிருக்கும் இந்த கிரிக்கெட், டி20, 100 ball கிரிக்கெட், டி10 என போட்டியின் நீளம் குறுகிக் கொண்டே வருவது, கிரிக்கெட்டுக்குப் பிள்ளையார் சுழி போட்ட டெஸ்ட் போட்டிகளை மெல்ல மெல்ல ரசிகர்களின் பார்வையிலிருந்து ஓரங்கட்டுகிறது. இன்றைக்கு ஒரு வீரர் ஒரே டி20 போட்டியில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸ் அடித்து ஓவர் நைட்டில் பிரபலமாகலாம்.

டெஸ்ட் கிரிக்கெட்

ஆனால், அதே வீரரிடம், டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அல்ல ஒரு நாள் முழுக்க பேட்டிங் செய் என்று சொன்னால் அரைநாளிலேயே பெவிலியன் திரும்பிவிடுவார். அத்தகைய கடினமானது டெஸ்ட் போட்டி. டெஸ்ட் போட்டிகள்தான் ஒரு முழுமையான வீரரை உருவாக்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட் - டிராவிட்

அப்படிப்பட்ட டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்போடு வைத்துக்கொள்ளவும், ரசிகர்களிடமிருந்து ஆர்வம் குறையாமல் பார்த்துக்கொள்ளவும்தான் 2019-ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கப்பட்டது. இன்றும், இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் தொடர், இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கெதிரான ஆஷஸ் தொடர் ஆகியவற்றுக்கு மேலும் ஹைப் கூட்டப்படுகிறது.

இப்படியான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பதே பெரிய விஷயம். ஆனால், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று 76 ஆண்டுகளாகியும், மறைந்து 22 ஆண்டுகளாகியும் டெஸ்ட் போட்டிகளில் யாரும் நெருங்க முடியாத சாதனையாளராகத் திகழ்பவர்தான் ஆஸ்திரேலியாவின் லெஜெண்ட் `டான் பிராட்மேன் (Don Bradman)'. டெஸ்டில் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு 99.94 ஆவரேஜ் வைத்திருக்கும் டான் பிராட்மேன், 1928 முதல் 1948 வரை தனது ஒட்டுமொத்த சர்வதேச கரியரில் மொத்தமாக 52 போட்டிகளில் 80 இன்னிங்ஸ்களில் 12 இரட்டைச் சதங்கள், 29 சதங்களுடன் 6,996 ரன்கள் குவித்திருக்கிறார். முதல்தர போட்டிகளில் 117 சதங்கள் அடித்திருக்கிறார்.

டான் பிராட்மேன்

இனிவரும் காலத்தில் டெஸ்டில் அதிக இரட்டைச் சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டான் பிராட்மேனை யாரேனும் ஒருவர் ஓரங்கட்டலாம். ஆனால், டெஸ்டில் அவரின் 99.94 ஆவரேஜை யாராலும் நினைத்துகூட பார்க்க முடியாது. இதுவுமே கூட, 1948-ல் இங்கிலாந்துக்கு எதிராக அவர் ஆடிய கடைசி சர்வதேச போட்டியில் 4 அடித்தால் ஆவரேஜில் சதம் என்ற அரிய சாதனை அவருக்காக காத்திருந்த வேளையில், முதல் இன்னிங்ஸில் அவர் டக் அவுட்டானதால் 99.94 ஆவரேஜுடன் நின்றது.

டான் பிராட்மேன்

அந்தப் போட்டியில், முதலில் பேட் செய்து 52 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அடித்த 389 ரன்களைத் தாண்ட முடியாமல் இரண்டாவது இன்னிங்ஸில் 188-க்கு ஆல் அவுட்டானதால் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதனால், இரண்டாவது இன்னிங்ஸில் ஆடமுடியாமல் போன டான் பிராட்மேன், தனது கரியரின் கடைசி சர்வதேச போட்டியைப் பூஜ்ஜியத்தில் முடித்தார். அவர் விளையாடிய காலத்தில் சர்வதேச ஒருநாள் போட்டி அறிமுகமாகவேயில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது (முதல் சர்வதேச ஒருநாள் போட்டி 1971 Aus vs Eng).

இப்படிப்பட்ட சாதனை வீரர் அணிந்து விளையாடிய பச்சை நிற தொப்பி தற்போது ரூ. 2.6 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது. அதுவும், இந்தியாவுக்கெதிரான போட்டியில் அவர் பயன்படுத்திய தொப்பி. சுதந்திரமடைந்த பிறகு இந்திய அணி மேற்கொண்ட முதல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் அது. டான் பிராட்மேனுக்கு அதுதான் தனது சொந்த மண்ணில் கடைசி டெஸ்ட் தொடர். அந்தத் தொடரில், ஆறு இன்னிங்ஸில் 178.75 ஆவரேஜில் 715 ரன்கள் குவித்தார். அந்தத் தொடரிலிருந்து தற்போது மிஞ்சியிருப்பது இந்த ஒரேயொரு தொப்பிதான்.

டான் பிராட்மேன் தொப்பி

அந்தத் தொப்பி, அப்போதைய இந்திய அணியின் மேனேஜருக்கு டான் பிராட்மேன் பரிசளித்தது என்று கூறப்படுகிறது. பின்னர், அந்தத் தொப்பி ஒருவரால் சேகரிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் டான் பிராட்மேன் மியூசியத்தில் வைக்கப்பட்டது. இந்த நிலையில், அந்தத் தொப்பி செவ்வாயன்று (டிசம்பர் 3) சிட்னியில் ஏலம் விடப்பட்டது. வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த ஏலத்தில் தொப்பியின் விலை 1,60,000 அமெரிக்க டாலரிலிருந்து 2,50,000 டாலருக்குச் சென்றது. அதாவது, ரூ. 2.1 கோடிக்கு ஏலம் போனது. இறுதியில், வாங்குபவரின் இறுதிக் கட்டணம் உட்பட தொப்பியின் விலை 3,10,000 டாலரை (ரூ. 2.6 கோடி) எட்டியது.

2001-ல் தனது 92 வயதில் மறைந்த டான் பிராட்மேன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்றும் டான்-ஆக நினைவுகூரப்படுகிறார்!

Champions Trophy 2025: பாகிஸ்தான் நிபந்தனையை ஏற்க மறுக்கும் BCCI - இணக்கமான முடிவு எட்டப்படுமா?

சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெத் வாரியம் இடையிலான பேச்சு வார்த்தை நீண்ட நாள்களாக தீர்வை எட்டாமல் இருக்கிற... மேலும் பார்க்க

Sachin: நண்பனை சந்தித்த சச்சின்; நெகிழ்ந்த வினோத் காம்ப்ளி! என்ன நடந்தது?

பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, சஞ்சய் பங்கர், ரமேஷ் பவார் போன்ற கிரிக்கெட் வீரர்களுக்கு சிறுவயது பயிற்சியாளராக ரமாகாண்ட் அச்ரேக்கர் இருந்திருக்கிறார்.2019ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

IND vs Aus PM 11: அசத்திய இளம் வீரர்கள்... சொதப்பிய ரோஹித்; ஆஸி பிரதமர் அணியை வீழ்த்திய இந்தியா!

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கும் இந்திய அணி, பி.எம் 11 எனப்படும் ஆஸ்திரேலிய பிரதமர் தேர்ந்தெடுத்த அந்நாட்டு வீரர்கள் அடங்கிய அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்ற... மேலும் பார்க்க

`நாங்கள் பும்ராவை எதிர்கொண்டோம் என்று பேரக்குழந்தைகளிடம்..!’ - புகழ்ந்து தள்ளிய டிராவிஸ் ஹெட்

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. முதல் போட்டியில் கே... மேலும் பார்க்க

Virat Kohli: `யாரும் செய்யாத சாதனை'- சாத்தியப்படுத்துவாரா கோலி?

சொந்த மண்ணில் நியூசிலாந்துடன் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்த வரலாற்றுத் தோல்வியுடன், பார்டர் கவாஸ்கரில் விளையாட ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பும்ரா தலைமையில் மாபெரும்... மேலும் பார்க்க

Jay Shah : `ஐ.சி.சியின் தலைவராக ஜெய்ஷா!' - முன் நிற்கும் சவால்கள் என்னென்ன?

கிரிக்கெட் உலகின் முக்கியப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார் ஜெய் ஷா. ஆம், நேற்று முதல் ஐ.சி.சியின் சேர்மன் பதவியை ஏற்றிருக்கிறார். இதுவரை பிசிசிஐயின் செயலாளராக இருந்து இந்திய கிரிக்கெட்டைக் கவனித்தவர், ... மேலும் பார்க்க