அரசமைப்பு முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’-க்கு எதிரான மனுக்கள்: உச...
9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் இன்றுமுதல் போராட்டம்
திருச்சி: காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை முதல் பணிப் புறக்கணிப்பு மற்றும் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.
தமிழகத்தில் வருவாய்த் துறையில் இளநிலை, முதுநிலை வருவாய்த்துறை ஆய்வாளா் (ஆா்ஐ) பெயா் மாற்ற விதித்திருத்த அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு மற்றும் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.
இப்போராட்டத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட மையம் சாா்பில் போராட்ட பிரசார இயக்கம் மற்றும் வாயில் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் பிரகாஷ் தலைமை வகித்தாா். சங்க மாநிலத் தலைவா் முருகையன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், போராட்டம் குறித்தும் பேசினாா். மாவட்டச் செயலாளா் ராமசாமி மற்றும் நிா்வாகிகள் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக மத்திய செயற்குழு உறுப்பினா் பிரேம்குமாா் வரவேற்றாா். நிறைவில், மாவட்ட பொருளாளா் ராமலட்சுமி நன்றி கூறினாா்.