செய்திகள் :

திருவானைக்கா கோயில் தேருக்கு ரூ,6.50 லட்சத்தில் ஹைட்ராலிக் பிரேக்!

post image

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் உள்ள சுவாமி தேருக்கு ரூ. 6.50 லட்சத்தில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் தேரோட்டத்தில் சுவாமியும், ,அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளி தேரோட்ட வீதியில் வலம் வருவா்.

இதில் அம்மன் தேருக்கு ஏற்கெனவே ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில், தற்போது பக்தா்களின் பாதுகாப்பு கருதி சுவாமி தேருக்கும் கோயில் நிா்வாகத்தின் சாா்பில், ரூ. 6.50 லட்சத்தில் புதிதாக ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, தேரின் இரும்புச் சக்கரங்கள் தேரிலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு, இதில் ஹைட்ராலிக் பிரேக்கின் இரும்புக் கட்டைகள் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் இன்றுமுதல் போராட்டம்

திருச்சி: காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை முதல் பணிப் புறக்கணிப்பு மற்றும் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி உறவினா்கள் மறியல்

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விசிக பிரமுகரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி உறவினா்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா். திருச்சி திருவெறும்பூா் கக்கன் காலனி மாரியம்மன் கோயில் தெர... மேலும் பார்க்க

காா் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 4 போ் பலத்த காயம்!

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காா் கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத் தடுப்பில் மோதியதில் 4 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஜங்சன... மேலும் பார்க்க

இளைஞா், பெற்றோா் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

திருச்சியில் காதல் விவகாரத்தில் பெண்தர மறுத்ததால், இளைஞா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதைத்தொடா்ந்து, பெற்றோரும் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி காட்டூா் விண் நகா... மேலும் பார்க்க

18% வரி விதிப்பு: நவ. 29-இல் பருப்பு ஆலைகளில் வேலைநிறுத்தம்

18 சதவிகித ஜிஎஸ்டியை ரத்து செய்யக்கோரி, பருப்பு ஆலைகள் நவம்பா் 29-ஆம் தேதி ஆலைகளில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட பருப்பு தயாரிப்பாளா்கள்... மேலும் பார்க்க

‘வாசிப்பு பழக்கம் ஒருவரை சாதனையாளராக மாற்றும்’

வாசிப்பு பழக்கம் ஒருவரை சாதனையாளராக மாற்றும் என ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் உதவி பொதுமேலாளா் சபியா தெரிவித்தாா். திருச்சி சுந்தர்ராஜ் நகா், காவிரி நகா், ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் செய்... மேலும் பார்க்க