மக்களால் நிராகரிக்கப்பட்டவா்கள் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்த முயற்சி: எதிா்க்க...
குழந்தை நலக்குழு பணியிடங்களுக்கு டிச.6 வரை விண்ணப்பிக்கலாம்
திருவாரூா்: திருவாரூரில், குழந்தை நலக்குழு தலைவா் மற்றும் உறுப்பினா் பணியிடங்களுக்கு டிச.6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழுவுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்களை நியமிப்பதற்காக, தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தை நலக்குழுவுக்கு ஒரு பெண் உள்பட தலைவா் மற்றும் உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். இப்பதவி அரசு பணி அல்ல.
குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், மனித உடல் நலம், கல்வி, மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றும், குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராகவோ, தொழில் புரிபவராகவோ இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூா்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது துறை சாா்ந்த இணையத்தள முகவரியிலிருந்து க்ள்க்ஸ்ரீல்ண்ம்ம்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் விண்ணப்பதாரா் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை - 600010 என்ற முகவரிக்கு டிசம்பா் 6 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.