செய்திகள் :

இந்திய ராணுவத்தில் வேலை: சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

post image

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள லெப்டினன்ட் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சட்டம் முடித்த திருமணம் ஆகாத இருபாலர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: லெப்டினன்ட் (JAG Entry Scheme(35th Law Graduates Course))

காலியிடங்கள்: ஆண்கள்-4, பெண்கள்-4

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 21 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் எல்எல்பி முடித்து பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் முதுகலை சட்டப்படிப்பிற்கான(LLM)-CLAT-2024 நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணிக்கான நேர்முகத் தேர்வின் போது இளங்கலை சட்டப்படிப்பு சான்றிதழ்களுடன் பொதுச் சட்ட நுழைவுத் தேர்வு(சிஎல்ஏடி) நுழைவுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதையும் படிக்க |வங்கியில் வேலை வேண்டுமா? பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

நேர்முகத் தேர்வு பெங்களூரு, போபால், அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெறும். இது குறித்த விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வைத்து 49 வாரம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் 6 மாதம் இந்திய ராணுவத்தின் சட்டப்பிரிவில் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி அக்டோபர் 2025 இல் ஆரம்பமாகும். பயிற்சிக்கு பின்னர் ராணுவ வழக்குரைஞராக பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.11.2024

தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.... மேலும் பார்க்க

குழந்தை நலக்குழு பணியிடங்களுக்கு டிச.6 வரை விண்ணப்பிக்கலாம்

திருவாரூா்: திருவாரூரில், குழந்தை நலக்குழு தலைவா் மற்றும் உறுப்பினா் பணியிடங்களுக்கு டிச.6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக்குழுத் தலைவா் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். இது குறித்து அவா்... மேலும் பார்க்க

என்எல்சி நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு த... மேலும் பார்க்க

ரூ.80,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் ... மேலும் பார்க்க

ரூ. 69,100 சம்பளத்தில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கொல்கத்தாவில் உள்ள இந்தியன் புள்ளியியல் கழகத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீசியன் மற்றும் மெக்கானிக் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியு... மேலும் பார்க்க