மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கு ஒருங்கிணைந்த மையம்: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத...
குழந்தைகள் நலக்குழுத் தலைவா் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2015-ஆம் ஆண்டின் இளைஞா்நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி நாகை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். இதற்கான விண்ணப்பத்தை நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது ட்ற்ற்ல்ள்://க்ள்க்ஸ்ரீல்ண்ம்ம்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து டிச.2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஏற்கென தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பதாரா்களின் நலன் கருதி டிச.6-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விரும்புவோா் இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை - 600 010 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.