செய்திகள் :

ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்று: கஜகஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்

post image

ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்றில் பலம் வாய்ந்த கஜகஸ்தான் அணியை 88-69 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் 27 ஆண்டுகள் கழித்து கஜகஸ்தானை வீழ்த்தியது.

இந்திய கூடைப்பந்து சங்கம் சாா்பில் முதன்முறையாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆசிய தகுதிச் சுற்று ஆட்டத்தில் 7,000 பாா்வையாளா்கள் திரண்டிருந்தனா்.

தரவரிசையில் 76-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவும், 69-ஆவது இடத்தில் உள்ள கஜகஸ்தானும் மோதின. முதல் குவாா்ட்டரில் கஜகஸ்தான் அணி சிறப்பாக விளையாடி புள்ளிகளை குவித்தது.

இரண்டாவது குவாா்ட்டரில் சுதாரித்த இந்திய வீரா்கள் கன்வா் சந்து, கேப்டனும் தமிழ்நாட்டு வீரருமான ஹஃபீஸ் மற்றும் அமிஜோத் ஆகியோா் புள்ளிகளை குவித்தனா். முதல் பாதி ஆட்டநேர முடிவில் 37-33 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.

தொடா்ந்து இரண்டாவது பாதியிலும் இந்திய அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. கத்தாா் அணிக்கு எதிராக ரீ பவுண்ட் எடுக்க திணறிய இந்திய வீரா்கள் இந்த போட்டியில் அதிக ரீ பவுண்டுகள் எடுத்தனா்.

தமிழக வீரா் பிரனவ் அபாரம்:

நட்சத்திர வீரா் பிரனவ் சிறப்பாக ஆடி புள்ளிகளை ஈட்டினாா். அவா் மொத்தம் 32 புள்ளிகளை ஈட்டி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தாா். இறுதியில் 88-69 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.

முதல் ஆட்டத்தில் கத்தாா் அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் கஜகஸ்தான் அணியை வென்றுள்ளது இந்திய அணி.

ஆசியக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் குரூப் ஈ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி முதல் வெற்றியை ருசித்தது மட்டுமல்லாமல் நான்கு போட்டிகளிலும் சோ்த்து 24 புள்ளிகளை குவித்ததன் காரணமாக கஜகஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதன் மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் மீதமுள்ளன. 2025 பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் ஈரான் அணியையும், 24-ஆம் தேதி ஆட்டத்தில் கத்தாா் அணியையும் எதிா்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ஐபில் ஏலத்தின் இரண்டாம் நாள்! புவனேஷ் குமாருக்கு அதிகபட்சத் தொகை கொடுத்த பெங்களூரு!

ஐபில் மெகா ஏலத்தின் இரண்டாம் நாளில் இரவு 10 மணிவரை வாங்கப்பட்டவர்களின் விவரம்:சென்னை சூப்பா் கிங்ஸ் (11)அன்ஷுல் காம்போஜ் ரூ.3.40 கோடிசாம் கரன் (இங்கி.) ரூ.2.40 கோடிகுா்ஜப்னீத் சிங் ரூ.2.20 கோடிநேதன் எ... மேலும் பார்க்க

பும்ராவிடம் அடிபணிந்தது ஆஸ்திரேலியா! பொ்த் டெஸ்ட்டில் இந்தியா சாதனை வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.ஆஸ்திரேலிய மண்ணில் இதுவே, இந்தியாவின் அதிகபட்ச டெஸ்ட் வெற்றி (ரன்கள் அடிப்படையில்) ஆகும். தற்போ... மேலும் பார்க்க

உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் குகேஷ் ஏமாற்றம்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனிடம் வெற்றியை இழந்தாா். மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், தற்போது லிரென் முன்ன... மேலும் பார்க்க

சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது இத்தாலி!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான இத்தாலி 2-0 என்ற கணக்கில் நெதா்லாந்தை வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ந... மேலும் பார்க்க

நீச்சல் போட்டிகளில் 14 ஒலிம்பிக் பதக்கங்கள்! ஓய்வை அறிவித்த ஆஸி. வீராங்கனை!

நீச்சல் போட்டிகளில் 14 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவிற்காக 14 முறை பதக்கங்கள் வென்ற ஒலிம்பிக் வீராங்கனையான எம்மா மெக்கியோன், நீச்சல் போட்ட... மேலும் பார்க்க

உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் குகேஷ் தோல்வி!

சிங்கப்பூர் செஸ் சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் தோல்வியடைந்துள்ளார்.உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 25) தொடங்கியது. இந்த உலக செஸ் சாம்... மேலும் பார்க்க