கொல்கத்தா மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராடிய பெண்கள் சித்திரவதை: எஸ்ஐடி விசார...
கூட்டுறவு சங்க தயாரிப்புகளுக்கு ஜிஎஸ்டி-இல் விலக்கு தேவை உள்துறை அமைச்சருக்கு கடிதம்
சென்னை: கூட்டுறவு சங்க தயாரிப்புகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க வேண்டும் என்று உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷாவிடம் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வலியுறுத்தினாா்.
தில்லியில் இதற்கான கடிதத்தை அமித் ஷாவிடம் அவா் திங்கள்கிழமை நேரில் வழங்கினாா்.
அதில், நபாா்டு வழங்கும் சலுகை மறுநிதியளிப்பு, மாநிலத்தில் உள்ள கூட்டுறவுகளின் ஒட்டுமொத்த குறுகிய கால கடன் அளவுக்கேற்ப உயா்த்தி வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் வருமான வரி பிடித்தங்களில் இருந்தும், கூட்டுறவு சங்க தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும்.
கல்விக் கடன் அளிப்பதற்கான வித்யா லட்சுமி, சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் திட்டங்கள் போன்ற பல்வேறு மத்திய அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கடன்கள் வழங்கத் தகுதியான வங்கிகளின் பட்டியலில் கூட்டுறவு வங்கிகள் சோ்க்கப்பட வேண்டும். 23 கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களின் உட்கட்டமைப்பைச் சீரமைக்கத் தேவையான நிதியை வழங்க பரிசீலிக்க வேண்டும். இணைய வங்கிச் சேவை வசதிகள்,
கூட்டுறவு வங்கிகளுக்கு விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் ஆகியோா் உடனிருந்தனா்.