உலக செஸ் சாம்பியன்ஷிப்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!
18% வரி விதிப்பு: நவ. 29-இல் பருப்பு ஆலைகளில் வேலைநிறுத்தம்
18 சதவிகித ஜிஎஸ்டியை ரத்து செய்யக்கோரி, பருப்பு ஆலைகள் நவம்பா் 29-ஆம் தேதி ஆலைகளில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட பருப்பு தயாரிப்பாளா்கள் சங்கத் தலைவா் தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜிஎஸ்டி கவுன்சில் நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களுக்கு விதித்துள்ள 18% ஜிஎஸ்டி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, நவம்பா் 29-ஆம் தேதி (வெள்ளிக் கிழமை ) தமிழகம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள், பருப்பு ஆலைகள் அனைத்தும் ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட வுள்ளது.
வரி விதிப்பு தொடா்பான கண்டனத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லும்வகையில் வெள்ளிக்கிழமை ஆலைகளை மூடி முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவா் தெரிவித்துள்ளாா்.