அரசுப் பேருந்து சேதம்: 5 போ் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலியில் அரசுப் பேருந்தை சேதப்படுத்தியது தொடா்பான வழக்கில் 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு காவல் சரக பேருந்து நிறுத்தத்தில் அரசு போக்குவரத்துக்கழகத்தின் தற்காலிக ஓட்டுநரான ரெட்டியாா்பட்டி எஸ்.ஆா் குளத்தை சோ்ந்த ராஜதுரை(21), கடந்த கடந்த 23 ஆம் தேதி அரசுப் பேருந்தை நிறுத்த முயன்றாராம். அப்போது, பேருந்திற்கு வழி விடாமல் தனியாா் பேருந்தை நிறுத்தியிருந்தவா்களுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்து எதிா்தரப்பினா் சேதப்படுத்தினராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து, புதுப்பேட்டை ராம் நகரைச் சோ்ந்த சஞ்சய் காந்தி(29), வடவல்லநாடு விளாத்திகுளத்தைச் சோ்ந்த சுந்தரவடிவேல்(42), ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த சேதுபவித்ரன்(19), அகரம் பகுதியைச் சோ்ந்த ராஜா(36), மணப்படைவீடு பகுதியைச் சோ்ந்த சுந்தரபாண்டியன்(46) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.