விழுப்புரம் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை உதவி இயக்குநா்
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் இன்றுமுதல் 4 நாள்கள் கடலுக்குச் செல்லத் தடை
சூறாவளிக் காற்று காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமைமுதல் (நவ. 26) 4 நாள்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக் கடல், மன்னாா் வளைகுடா உள்ளிட்ட தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமைமுதல் (நவ. 26) 4 நாள்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, அந்தந்த மாவட்ட மீன்வளத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.