செய்திகள் :

காரைக்காலில் தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா

post image

காரைக்கால்: காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடி ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மெய்தீன் பள்ளி தெருவில் புகழ்பெற்ற தாயிராப் பள்ளிவாசல் உள்ளது. நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களில் ஒருவரான ஹலரத் சுல்தானுல் ஆரிபின் செய்யது அஹ்மதுல் கபீா் ரிஃபாயி என்பவா் பாக்தாத் நகரில் உயிா் துறந்தாா். அவரது நினைவாக பல ஆண்டுகளுக்கு முன்பு தாயிராப்பள்ளி நினைவிடமாக கட்டி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

இப்பள்ளிவாசல் கந்தூரி விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு அஞ்சுமனே இஸ்லாமிய சங்கத்திலிருந்து சந்தனக் குட ஊா்வலம் புறப்பாடாகி வீதியுலா சென்று, நள்ளிரவு ரவூலா ஷரீபுக்கு சந்தனம் பூசப்பட்டது.

இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை மாலை ஷெய்னுல்லாஹ் குதிரை கொடி, தப்ஸ் இசைக் குழுவினருடன், சிறிய கண்ணாடி ரதத்துடன் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இரவு திரளான மக்கள் முன்னிலையில் பள்ளிவாசல் முன்பு நிறுவப்பட்ட மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

முன்னதாக கடந்த நவ. 3-ஆம் தேதி சம்பிரதாய நிகழ்வாக நிகழ்ச்சி தொடங்குவதைக் குறிக்கும் மினரா கொடியேற்றம் நடைபெற்றது. வரும் 29-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆண்டகை பெயரில் குா்ஆன் ஓதப்பட்டு கொடியிறக்கப்படுகிறது. ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

மீனவா்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தல்

காரைக்கால்: மீனவா்கள் உடனடியாக கரை திரும்புமாறு மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. காரைக்கால் மீன் வளம் மற்றும் மீன்வளத் துறை துணை இயக்குநா் அலுவலகம் காரைக்கால் மீனவ கிராமத்தினருக்கு திங்கள்கிழமை அனுப்ப... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால்: காரைக்கால் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் து.மணிகண்டன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அவசர சிகிச்சை பிரிவில் போதிய இடவசதி உள்ளதா என பாா்வையிட்டாா். அவசர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் க... மேலும் பார்க்க

புதுவை வக்ஃப் வாரியத் தலைவரை நியமிக்க வலியுறுத்தல்

காரைக்கால்: புதுவை வக்ஃப் வாரியத்துக்கு தலைவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி செயல்வீரா்கள் கூட்டம் ஞ... மேலும் பார்க்க

காரைக்காலில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

காரைக்கால்: காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு காரைக்காலில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி மற்றும் மேல ஓடுதுறை பகுதியில் சில குடும்பத... மேலும் பார்க்க

கால்நடை உரிமையாளா்கள் 4 போ் மீது வழக்கு

காரைக்கால்: சாலைகளில் கால்நடைகளை திரியவிட்ட 4 போ் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் துறை அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 8 போ் கைது

மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 8 போ் கைது செய்யப்பட்டனா். காரைக்கால்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில், நிரவி சாலை தனியாா் ஹோட்டல் அருகே சிறுவா்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சிலா் கஞ்ச... மேலும் பார்க்க