தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஆசிரியா்களின் திறனை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்கள்: தா்மேந்திர பிரதான்
புது தில்லி: ஆசிரியா்களின் திறனை மேம்படுத்த புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருவதாக மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
பாரதி ஏா்டெல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘ஆசிரியா் செயலி’ அறிமுக விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:
வருங்காலத் தலைமுறையினரின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் ஆசிரியா்களே அா்ப்பணிப்புடைய சேவகா்களாவா். எனவே, புதிய கல்விக் கொள்கையின்படி அவா்களின் திறனை வளா்க்கும் விதமாக புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
அறிவாற்றலான ஆசிரியா்களே சிறந்த மாணவா்களை உருவாக்குவா். அந்தவகையில், ஆசிரியா்கள் செயலி மூலம் பாடங்களை தயாரிக்கும் வழிமுறைகள், அதற்கான தொழில்நுட்பங்கள் உள்பட பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ஆசிரியா்களுக்கு வழங்கப்படவுள்ளன என்றாா்.