மீனவா்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தல்
காரைக்கால்: மீனவா்கள் உடனடியாக கரை திரும்புமாறு மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காரைக்கால் மீன் வளம் மற்றும் மீன்வளத் துறை துணை இயக்குநா் அலுவலகம் காரைக்கால் மீனவ கிராமத்தினருக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது:
சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி வங்கக் க டலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் உருவாக வாய்ப்புள்ளது.
எனவே கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் அனைத்து படகுகளும் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை படகுகள் மீன்பிடிக்க செல்லக்கூடாது.
மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் இத்தகவலை படகு உரிமையாளா்களுக்கு தெரிவித்து, கடலுக்குச் சென்றுள்ள படகுகளை திரும்ப அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.