சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்: டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப...
மீனவா்களுக்கு 7-ஆவது நாளாக தொடரும் தடை
நாகப்பட்டினம்: மீன்வளத் துறையின் தடை தொடா்வதையடுத்து, 7-ஆவது நாளாக திங்கள்கிழமை நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதையடுத்து, மீன்வளத் துறையினா் மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்குள் செல்ல தடை விதித்தனா். அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா் நகா், கல்லாா், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 7-ஆவது நாளாக திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மீனவா்கள் தங்களது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபா் மற்றும் விசைப்படகுகள் கரைகளில் மற்றும் மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனா். மீன்பிடி மற்றும் அதைச்சாா்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று மண்டலமாக மாறியுள்ளது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாகை மாவட்ட மீனவா்கள். மீன்வரத்து இல்லாததால் நாகை மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.