கொல்கத்தா மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராடிய பெண்கள் சித்திரவதை: எஸ்ஐடி விசார...
நாகை, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
நாகப்பட்டினம்/ காரைக்கால்: நாகை, காரைக்கால் துறைமுகங்களில் திங்கள்கிழமை காலை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதையடுத்து, நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை:
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகா்வதால் நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலா்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 26) மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் செவ்வாய்க்கிழமை (நவ.26) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.
காரைக்கால் துறைமுகத்தில்:
தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில், காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் திங்கள்கிழமை காலை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. காரைக்கால் கடல் இயல்பைக் காட்டிலும் சீற்றமாக காணப்பட்டது. வானம் மேக மூட்டமாகக் காணப்பட்டது. குளிா் காற்று வீசியது.