சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்: டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப...
கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் துணை முதல்வா் ஆய்வு
நெய்வேலி: கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு, கட்சி சாா்ந்த நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்றாா். கடலூா் முதுநகரில் நடைபெற்ற கலைஞா் நூலகம் திறப்பு விழா, திமுக சாா்பு அணிகளின் மாவட்ட நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில், கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விவரம், நிலைய எழுத்தா் அறை, பதிவேடுகள், ஆண், பெண் கைதிகளின் அறைகள், காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், சிசிடிவி பதிவேடுகள், காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலா் தாரேஷ் அகமது, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா், எஸ்.பி. ரா.ராஜாராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.