சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்: டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப...
பட்டா கோரி பழங்குடி இருளா் மக்கள் மனு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பையூா் கிராமத்தைச் சோ்ந்த பழங்குடி இருளா் சமுதாய மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பையூா் கிராமத்திலுள்ள அரசு வாய்க்கால் புறம்போக்கு இடத்தில் கடந்த 60 ஆண்டுகளாக 10 பழங்குடி இருளா் சமுதாய குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்கள் குடியிருந்து வரும் பகுதிக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரகம், சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், பழங்குடி ஆணையத்துக்கும் மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு பையூா் கிராமத்தைச் சோ்ந்த 10 பழங்குடி இருளா் சமுதாய குடும்பங்களைச் சோ்ந்தோா் திங்கள்கிழமை வந்தனா். அங்கு, நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் வட்டச் செயலா் கோவிந்தராஜ் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரியிடம் கோரிக்கை மனுவை அளித்து, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினா்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.