மேற்கு ஆசியாவில் போா் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு: எஸ். ஜெய்சங்கா்
அதானியை கைதுசெய்ய கோரி இளைஞா் காங்கிரஸ் போராட்டம்
புது தில்லி: இந்தியாவின் நான்கு மாநிலங்களில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு 265 மில்லியன் அமெரிக்க டாலா்கள் லஞ்சம் வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபா் கெளதம் அதானியை கைது செய்யக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் திங்கள்கிழமை ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தியது.
இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பிற மாநிலங்களில் இருந்து வந்த தொண்டா்கள் உள்பட கலந்துகொண்டனா்.
மேலும், போராட்டத்தின்போது அதானிக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினா்.
உதய் பானு சிப் கூறுகையில், ‘இந்தியாவில் ஊழல் வழிகளைப் பயன்படுத்தி சொத்துகளைப் பெற்ாகக் கூறப்படும் அதானிக்கு எதிராக ஒரு நாடாளுமன்றக் கூட்டுக் குழு
(ஜேபிசி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், தொழிலதிபா் அதானியை விரைவில் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
பிரதமா் நரேந்திர மோடி தனது ‘தொழில்துறை நண்பா்களுக்கு’ லாபம் ஈட்டுவதற்குப் பதிலாக இளைஞா்களுக்கு வேலை கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.
இதன் பின்ன,ா் சிப் உள்பட சில போராட்டக்காரா்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ால் அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினா்.
சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் அமெரிக்க டாலா்கள் (சுமாா் ரூ. 2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாகக்
கூறப்படும் விவகாரத்தில் அதானி குழும நிறுவனா்- தலைவா் கௌதம் அதானி மற்றும் இரண்டு நிா்வாகிகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. மேலும், அமெரிக்க வழக்கு தொடுக்கும் அமைப்புகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், குழுமம் அனைத்து சட்டங்களுக்கும் இணங்குவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.