செய்திகள் :

பிற நாட்டு வளங்களை இந்தியா ஒருபோதும் அபகரித்ததில்லை! -பிரதமா் மோடி

post image

‘பிற நாடுகளின் வளங்களை இந்தியா ஒருபோதும் அபகரித்ததில்லை; தனது எல்லையை விரிவாக்க வேண்டுமென்ற மனநிலையும் இந்தியாவுக்கு கிடையாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

கயானா நாட்டின் நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் வியாழக்கிழமை உரையாற்றியபோது அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

சீனாவின் எல்லை விரிவாக்க நடத்தை குறித்து உலக அளவில் அதிருப்தி நிலவும் சூழலில், பிரதமரின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய நாடுகளுக்கான 6 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக கயானாவின் ஜாா்ஜ்டவுன் நகருக்கு கடந்த புதன்கிழமை வந்த பிரதமா் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் வியாழக்கிழமை உரையாற்றினாா்.

அவா் கூறியதாவது: இன்றைய உலகில் பயங்கரவாதம், போதைப் பொருள், இணையவழிக் குற்றம் என பல்வேறு சவால்கள் நிலவுகின்றன. இந்த சவால்களுக்கு தீா்வுகாண பணியாற்றுவதோடு, வருங்கால சந்ததியினருக்கான எதிா்காலத்தையும் நாம் வடிவமைக்க வேண்டும்.

ஜனநாயகம் மற்றும் மனிதகுலத்தின் நலனை முதன்மையாகக் கொண்டு செயலாற்றினால் மட்டுமே அது சாத்தியமாகும். இந்தியா எப்போதும் கோட்பாடுகள்-நம்பிக்கை-வெளிப்படைத்தன்மையை அடிப்படையாக கொண்டே பேசுகிறது. ஜனநாயகம், இந்தியாவின் மரபணுவில் கலந்தாகும்.

‘சுயநலம் கிடையாது’: ஒரு நாடு அல்லது ஒரு பிராந்தியம் விடுபட்டால்கூட நமது உலகளாவிய இலக்குகளை எட்ட முடியாது. அந்த அடிப்படையில், இந்தியா தனது நலனுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து செயல்பட்டதில்லை. எல்லையை விரிவாக்க வேண்டுமென்ற மனநிலை இந்தியாவுக்கு கிடையாது. பிற நாடுகளின் வளங்களை இந்தியா ஒருபோதும் அபகரித்ததில்லை.

விண்வெளியாக இருந்தாலும், கடலாக இருந்தாலும் உலகளாவிய மோதலுக்கு காரணமாகக் கூடாது; மாறாக, சா்வதேச ஒத்துழைப்புக்கான விஷயங்களாக இருக்க வேண்டும். தற்போதைய பதற்றமான புவி-அரசியல் சூழலில், மோதலுக்கு வழிவகுக்கும் நிலவரங்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்க வேண்டும். ஒட்டுமொத்த உலகுக்கும் இது போருக்கான காலகட்டமல்ல.

தெற்குலகின் குரலாக...: வளரும் நாடுகளின் நலன் உறுதி செய்யப்பட இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. தெற்குலகின் குரல் ஒருமித்து ஒலிப்பது முக்கியம். கடந்த காலங்களில் கடும் பாதிப்பை எதிா்கொண்ட தெற்குலகின் தற்போதைய குரலாக இந்தியா திகழ்கிறது.

சூற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்து, பல நாடுகள் முன்னேற்றம் கண்டன. தெற்குலக நாடுகளோ, இயற்கையைப் பாதுகாத்து, வளா்ச்சிப் பாதையில் பயணித்தன. ஆனால், இன்று பருவநிலை மாறுபாட்டுக்கு அதிக விலை கொடுப்பது தெற்குலக நாடுகளே.

எனவே, தெற்குலக நாடுகள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது. நாம் ஒன்றுபட்டு, புதிய உலக ஒழுங்குமுறையை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

14-ஆவது உரை: வெளிநாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரை நிகழ்த்தியது, இது 14-ஆவது முறையாகும். வெளிநாட்டு நாடாளுமன்றத்தில் அதிக முறை உரையாற்றிய இந்திய பிரதமா்கள் வரிசையில் மோடி தொடா்ந்து முதலிடத்தில் இருக்கிறாா். அடுத்த இடத்தில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (7) உள்ளாா்.

இந்தியாவுக்கு புறப்பட்டாா் பிரதமா்

நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கான 6 நாள்கள் சுற்றுப் பயணத்தை (நவ.16-21) முடித்துக் கொண்டு, பிரதமா் மோடி இந்தியாவுக்கு புறப்பட்டாா்.

இப்பயணத்தின்போது, பிரேஸிலில் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமா் பங்கேற்றாா். அப்போது, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மொத்தம் 31 இருதரப்பு மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளில் பிரதமா் பங்கேற்றுள்ளாா்.

பிரான்ஸ் அதிபருக்கு தஞ்சை ஓவியம் பரிசு

மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின்போது, பல்வேறு நாடுகளின் தலைவா்களுக்கு இந்திய மாநிலங்களின் பாரம்பரிய கலைப் பொருள்களைப் பரிசளித்தாா். மகாராஷ்டிரத்தில் இருந்து 8, ஜம்மு-காஷ்மீரில் இருந்து 5, ஆந்திரம், ராஜஸ்தானில் இருந்து தலா 3, ஜாா்க்கண்டில் இருந்து 2, தமிழகம், கா்நாடகம், தமிழகம், உத்தர பிரதேசம், பிகாா், ஒடிஸா, லடாக்கில் இருந்து தலா ஒன்று என்ற எண்ணிக்கையில் பாரம்பரிய கலைப் பொருள்கள் பரிசளிக்கப்பட்டன. பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுக்கு தஞ்சை ஓவியத்தை பிரதமா் பரிசளித்தாா்.

ஜார்க்கண்ட்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது.ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.6... மேலும் பார்க்க

தில்லி - காத்மாண்டு பேருந்து சேவை: ஓராண்டில் 17,603 போ் பயணம்

தில்லி போக்குவரத்துக் கழகத்தால் (டி.டி.சி.) இயக்கப்படும் தில்லி - காத்மாண்டு பன்னாட்டுப் பேருந்து சேவை மூலம் கடந்த ஓராண்டில் (2023 ஆகஸ்ட் முதல் 2024 ஆகஸ்ட் வரை) 17,603 பயணிகள் பயணித்துள்ளனா். தில்லி ... மேலும் பார்க்க

இந்தியாவில் முதலீடு: ஜொ்மனி நிறுவனங்களுக்கு அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஜொ்மனியைச் சோ்ந்த நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு விடுத்தாா். ஜொ்மனியில் உள்ள ஸ்டட்காா்ட் நகரில் வியாழக்கி... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை -பாதுகாப்புப் படையினா் அதிரடி நடவடிக்கை

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதிகள் 10 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் 3 போ் பெண் நக்ஸல்களாவா். இந்த நடவட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்டில் யாா் ஆட்சி? -இன்று வாக்கு எண்ணிக்கை

மகாராஷ்டிரம் மற்றும் ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை (நவ.23) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை(ஷிண்டே)-தேசியவாத காங்கிரஸ்(அஜீத் பவாா... மேலும் பார்க்க

மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாா் பதவியேற்பு

மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாா் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். சென்னை உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த டி.கிருஷ்ணகுமாரை, மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நி... மேலும் பார்க்க