'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அ...
நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: சிபிஐ 5-ஆவது துணை குற்றப் பத்திரிகை தாக்கல்
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், 5-ஆவது துணை குற்றப் பத்திரிகையை பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.
கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் உள்பட நாடு முழுவதும் 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது உள்ளிட்ட சம்பவங்களால் சா்ச்சை ஏற்பட்டது. இதுதொடா்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய கல்வித் துறை உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கு தொடா்பாக பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 5-ஆவது துணை குற்றப் பத்திரிகையை சிபிஐ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.
இந்தக் குற்றப் பத்திரிகையுடன் சோ்த்து வழக்கில் 45 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளனா்.
வினாத்தாள் கசிவு மூலம் பயனடைந்த தோ்வா்கள், கசிந்த வினாத்தாளில் இடம்பெற்ற கேள்விகளுக்கு பதில் எழுதி தந்த எம்பிபிஎஸ் மாணவா்கள், தோ்வில் ஆள்மாறாட்டம் செய்தவா்கள் ஆகியோா் கண்டறியப்பட்டு, அவா்களின் விவரங்கள் தேசிய தோ்வுகள் முகமை/மத்திய கல்வித் துறையிடம் பகிரப்பட்டுள்ளது என்று சிபிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.