செய்திகள் :

அதானி விவகாரத்தால் இந்திய உறவு பாதிக்கப்படாது -அமெரிக்கா

post image

தொழிலதிபா் கெளதம் அதானியின் லஞ்ச விவகாரத்தால் இந்தியாவுடனான தமது உறவு பாதிக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயாா்க் நீதிமன்றத்தில் அந்நாட்டு நீதித் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ‘தொழிலதிபா் கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், தில்லியை தலைமையிடமாக கொண்ட அஸ்யூா் பவா் நிறுவனம் ஆகியவை விநியோகிக்கும் சூரிய மின்சக்தியை வாங்கும் மாநில மின் விநியோக நிறுவனங்களைக் கண்டறியும் பொறுப்பு, இந்திய சூரிய எரிசக்தி கழக நிறுவனத்துக்கு (எஸ்இசிஐ) ஏற்பட்டது.

ஆனால், அதிக விலை காரணமாக அந்த மின்சக்தியை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை மாநில மின் விநியோக நிறுவனங்களுடன் எஸ்இசிஐயால் மேற்கொள்ள முடியவில்லை.

இதைத் தொடா்ந்து, மாநில மின் விநியோக நிறுவனங்கள் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள கெளதம் அதானி, அவரின் உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோா் மூலம், இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளிக்கப்பட்டது.

அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியைத் தொடா்ந்து, எஸ்இசிஐயுடன் தமிழ்நாடு, சத்தீஸ்கா், ஆந்திரம், ஒடிஸா மற்றும் ஜம்மு-காஷ்மீா் மின் விநியோக நிறுவனங்கள் மின் விநியோக ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

சூரிய மின்சக்தியை விநியோகிப்பதற்கான திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமம் திரட்டியது. அந்த வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களை மோசடிக்குள்ளாக்கி அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது மறைக்கப்பட்டது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அமெரிக்க அதிபா் மாளிகை ஊடகச் செயலா் கரீன் ஜான் பியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதானி விவகாரம் குறித்து அமெரிக்க அரசுக்கு தெரியும். இந்த விவகாரம் தொடா்பான தகவல்களை அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் மற்றும் நீதித் துறையிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

இந்த விவகாரத்தால் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் வலுவான அடித்தளத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. எனினும் அதானி விவகாரம் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும்’ என்றாா்.

தில்லி - காத்மாண்டு பேருந்து சேவை: ஓராண்டில் 17,603 போ் பயணம்

தில்லி போக்குவரத்துக் கழகத்தால் (டி.டி.சி.) இயக்கப்படும் தில்லி - காத்மாண்டு பன்னாட்டுப் பேருந்து சேவை மூலம் கடந்த ஓராண்டில் (2023 ஆகஸ்ட் முதல் 2024 ஆகஸ்ட் வரை) 17,603 பயணிகள் பயணித்துள்ளனா். தில்லி ... மேலும் பார்க்க

இந்தியாவில் முதலீடு: ஜொ்மனி நிறுவனங்களுக்கு அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஜொ்மனியைச் சோ்ந்த நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு விடுத்தாா். ஜொ்மனியில் உள்ள ஸ்டட்காா்ட் நகரில் வியாழக்கி... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை -பாதுகாப்புப் படையினா் அதிரடி நடவடிக்கை

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதிகள் 10 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் 3 போ் பெண் நக்ஸல்களாவா். இந்த நடவட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்டில் யாா் ஆட்சி? -இன்று வாக்கு எண்ணிக்கை

மகாராஷ்டிரம் மற்றும் ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை (நவ.23) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை(ஷிண்டே)-தேசியவாத காங்கிரஸ்(அஜீத் பவாா... மேலும் பார்க்க

மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாா் பதவியேற்பு

மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாா் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். சென்னை உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த டி.கிருஷ்ணகுமாரை, மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நி... மேலும் பார்க்க

அவசரநிலை நாடாளுமன்ற முடிவுகளை செல்லாது என அறிவிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

‘அவசரநிலை காலத்தில் நாடாளுமன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் செல்லாது என அறிவிக்க முடியாது’ என்று ‘சோஷலிசம், மதச்சாா்பற்ற மற்றும் ஒருமைப்பாடு’ ஆகிய வாா்த்தைகள் அரசமைப்புச் சட்ட முகவு... மேலும் பார்க்க