செய்திகள் :

ரூ.2.63 கோடிக்கு ஏலம் போன டான் பிராட்மேன் தொப்பி!

post image

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சர் டான் பிராட்மேனின் 'பேக்கி கிரீன்' தொப்பி, டிசம்பர் 3 ஆம் தேதி சிட்னியில் நடந்த ஏலத்தில் விற்கப்பட்டது.

1947-1948-ல் இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவிற்காக கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடரின் போது பிராட்மேன் அணிந்திருந்த தொப்பி 3,90,000 டாலருக்கு (ரூ. 2.14 கோடி), வரியுடன் சேர்த்து 479,700 டாலராக (ரூ.2.63 கோடி) உயர்த்தப்பட்டு விலைக்கு வாங்கப்பட்டது.

இதையும் படிக்க..:நியூசி., இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம்..! டபிள்யூடிசியில் புள்ளிகள் இழப்பு!

டான் பிராட்மேன், 52 டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் மற்றும் 13 அரைசதங்களுடன் 6996 ரன்களை எடுத்துள்ளார். இவர் அதிக இரட்டை சதங்கள் (12), அதிக முச்சதங்கள் (2) அடித்தவர் என்ற சாதனையை படைத்தவர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஆஸ்திரேலியா இங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அப்போது பிராட்மேன் முதல்தரப் போட்டிகளில் தனது 100-வது சதத்தை நிறைவு செய்தார்.

இதையும் படிக்க..:போர்க்களம் மாதிரி பும்ராவின் முதலிரண்டு ஓவரை விளையாட வேண்டும்..! ஆஸி. வீரர் கருத்து!

3 டெஸ்ட் போட்டிகளில் 6 இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பிராட்மேன், 178.75 சராசரியுடன் 715 ரன்கள் எடுத்தார். அதில் 3 சதங்களை பதிவு செய்தது, மட்டுமல்லாமல் அதில் ஒன்று இரட்டை சதமும் விளாசினார்.

அந்தத் தொடரில் இந்திய அணியின் மேலாளருக்கு டான் பிராட்மேன் தனது தொப்பியை பரிசளித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு பழங்காலப் பொருள்கள் வாங்கும் சேகரிப்பாளர் ஒருவரால் அந்தத் தொப்பி வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க..:இந்தியாவுக்கு தைரியம் அதிகம்: முன்னாள் இங்கிலாந்து வீரர் புகழாரம்!

டெஸ்ட் தரவரிசை: உச்சபட்ச நிலைகளில் ஹாரி புரூக், மார்கோ யான்சென், பவுமா முன்னேற்றம்!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் 171 ரன்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 854 புள்ளிகள்பெற்று உச்சபட்ச நிலையை அடைந்துள்ளார். ஹாரி புரூக்இதன்மூல... மேலும் பார்க்க

ஆர்ச்சருக்கு ஒப்பந்தம் நீட்டிப்பு..! பென் ஸ்டோக்ஸ் விமர்சனம்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் (21) தனது அறிமுகப் போட்டியிலேயே அரைசதமடித்து அசத்தினார். தற்போது, ஜேக்கப் பெத்தேல் இங்கிலாந்து அணியின் 2 வருட மத்திய ஒப்பந்தத... மேலும் பார்க்க

சூப்பர்ஸ்டார்கள் நிறைந்தது இந்திய அணி..! ஆஸி. வீரர் புகழாரம்!

பார்டர் - கவாஸ்கர் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்ட் டிச.6ஆம் தேதி அடிலெய்டு ஆடுகளத்தில் நடைபெறவிருக்கிறது.பிங்க் பந்தில் இரவு பகல் ஆட்டமாக நடைபெறுகிறது. இந்திய அணி... மேலும் பார்க்க

அடிலெய்டு பிட்ச் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது? பிட்ச் மேற்பார்வையாளரின் பேட்டி!

பார்டர் - கவாஸ்கர் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்ட் டிச.6ஆம் தேதி அடிலெய்டு ஆடுகளத்தில் நடைபெறவிருக்கிறது. பிங்க் பந்தில் இரவு பகல் ஆட்டமாக நடைபெறுகிறது. இந்திய அண... மேலும் பார்க்க

பிங்க் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனைகள்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பகல்- இரவு டெஸ்ட் போட்டிகளை பிரபலமாக்கும் நோக்கில் 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. மேலும், பகல்- இரவு டெஸ்ட் போட்டிக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பிங்க் நிறப் பந்துகள... மேலும் பார்க்க

விராட் கோலியின் சதங்கள் என்னை பயமுறுத்துகின்றன! -ஆஸி. முன்னாள் கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி குறித்து உலகக்கோப்பையை வென்று தந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார்.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத... மேலும் பார்க்க