வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
சூப்பர்ஸ்டார்கள் நிறைந்தது இந்திய அணி..! ஆஸி. வீரர் புகழாரம்!
பார்டர் - கவாஸ்கர் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்ட் டிச.6ஆம் தேதி அடிலெய்டு ஆடுகளத்தில் நடைபெறவிருக்கிறது.
பிங்க் பந்தில் இரவு பகல் ஆட்டமாக நடைபெறுகிறது. இந்திய அணி 2020இல் இந்த ஆடுகளத்தில்தான் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1-0 என இந்தியா முன்னிலையில் இருந்தாலும் இந்த ஆடுகளம் குறித்து இந்திய அணிக்கு அச்சமிருக்கும்.
இது குறித்து நாதன் லயன் கூறியதாவது:
நான் இந்தியாவை பல சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த அணியாகவே பார்க்கிறேன். கிரிக்கெட் என்பது குழுவின் ஆட்டம். வெற்றிபெற அனைவரும் நன்றாக செயல்பட வேண்டும்.
இந்தியாவில் பும்ரா மட்டுமல்ல மற்ற வீரர்கள் இருப்பதை பெருமிதங்கொள்ளலாம்.
நாங்கள் யார் ஒருவரை மட்டும் கவனம் செலுத்தவில்லை. அற்புதமான அணியாக இருக்கிறது இந்திய அணி. அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் நாங்கள் மதிக்கிறோம். அதனால் நாங்கள் அவர்களுடன் போட்டியிடாமல் இருக்கப்போவதில்லை. இந்திய அணி உலகத்திலேயே சிறந்த அணி.
இந்திய அணிக்குள் சிறப்பான வீரர்கள் இருக்கிறார்கள். அஸ்வின் 530 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஜடேஜா 300 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இவ்வளவு அற்புதமான வீரர்கள் பிளேயிங் லெவனில் இல்லாமல் பென்சில் உட்காருவது பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.
நல்ல சவால் இருக்கும் என நினைக்கிறேன். பவுன்டரிகள் அடிக்கும்போதுதான் எனக்கும் விக்கெட் எடுக்க வாய்ப்பு கிடைக்கும் என்றார்.