`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
டெஸ்ட் தரவரிசை: உச்சபட்ச நிலைகளில் ஹாரி புரூக், மார்கோ யான்சென், பவுமா முன்னேற்றம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் 171 ரன்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 854 புள்ளிகள்பெற்று உச்சபட்ச நிலையை அடைந்துள்ளார்.
ஹாரி புரூக்
இதன்மூலம், ஹாரி புரூக் ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஜோ ருட் முதல் இடத்தில் இருக்கிறது. 41 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹாரி புரூக் 2ஆவது இடத்தில் இருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக ஜோ ரூட் டக் அவுட்டானார். ஹாரி புரூக் சிறப்பான ஆட்டத்தினால் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் கீழே தள்ளப்பட்டுள்ளார்.
மற்ற இங்கிலாந்து வீரர்களான ஆலி போல் 8 இடங்கள் முன்னேறி 32ஆவது இடத்திலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 7 இடங்கள் முன்னேறி 34ஆவது இடத்திலும் இருக்கிறார்கள்.
டெம்பா பவுமா
இலங்கைக்கு எதிராக 233 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி. இந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதல்முறையாக டாப் 10 தரவரிசையில் இடம் பிடித்துள்ளார்.
70, 113 ரன்கள் அடித்த பவுமா தரவரிசையில் 14 இடங்கள் முன்னேறியுள்ளார். கமிந்து மெண்டிஸ் 7ஆவது இடத்திக்கு முன்னேறியுள்ளார்.
பவுமாவின் ஆட்டம் சிறப்பாக இருந்ததாக பலரும் பாராட்டி வருகிறார்கள்.
மார்கோ யான்சென்
ஆல்ரவுண்டர் தரவரிசையில் தென்னாப்பிரிக்காவின் மார்கோ யான்சென் 10 இடங்கள் முன்னேறி 2ஆவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் ஜடேஜாவும் 3ஆவது இடத்தில் அஸ்வினும் இருக்கிறார்கள்.
மார்கோ யான்சென் பந்துவீச்சில் 19 இடங்கள் முன்னேறி 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உச்சபட்ச நிலைகளில் ஹாரி புரூக், மார்கோ யான்சென், பவுமா
பேட்டராக ஹாரி புரூக், டெம்பா பவுமாவும் பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டராக மார்கோ யான்செனும் தங்களது உச்சபட்ச நிலைகளை முதல்முறையாக டெஸ்ட் தரவரிசையில் அடைந்துள்ளார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும் தென்னாப்பிரிக்கா 2ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.