செய்திகள் :

Ajith: ``ரேஸிங்தான் என்னை நிறைவாக உணரச் செய்கிறது!'' -அஜித்தின் நெகிழ்ச்சியும் வெளியான அப்டேட்டும்!

post image
நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொள்ளப் போகிறார் எனும் தகவல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அஜித்தின் மேலாளார் சுரேஷ் சந்திராவும் அதை உறுதி செய்தார். இந்நிலையில் அஜித் கலந்துகொள்ளப் போகும் ரேஸை பற்றி மேலும் சில அப்டேட்கள் வெளியாகியிருக்கிறது.
Ajith

திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி அஜித்துக்கு மோட்டோ ஸ்போர்ட்ஸின் மீதும் துப்பாக்கிச் சுடுதலின் மீதும் தீவிர ஆர்வம் உண்டு. திரைப்படங்களில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அஜித் பைக், கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார். 18 வயதிலேயே Indian National Motorcycle Racing Championship என்ற தொடரில் பங்கேற்றிருக்கிறார். 2000 களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்ட பிறகும் கூட அவருக்கு ரேஸின் மீதான ஆர்வம் குறையவில்லை. 2002 இல் National Formula India Single Sweater Championship, 2003 இல் Formula BMW Asia Championship, 2004 இல் British Formula 3 Championship, 2010 இல் European Formula 2 Championship என முக்கியமான தொடர்கள் பலவற்றிலும் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில்தான் இப்போது அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் Michelin Dubai 24H 2025 என்ற தொடரிலும் European 24 H series championship என்ற தொடரிலும் அஜித் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்.

'Ajith Kumar Racing' என்ற அணியின் சார்பில்தான் இந்த பந்தயங்களில் அவர் கலந்துகொள்ளப்போகிறார். அஜித்தின் அணியில் பேபியன் என்கிற GT4 Champion பட்டத்தை வென்றவரும், மேத்யூ டெட்ரி என்கிற GT3 பட்டத்தை வென்றவரும், கேம் மெக்லாட் என்கிற F4 British சாம்பியன் பட்டத்தை வென்றவரும் இடம்பிடித்திருக்கின்றனர். நோயல் தாம்சன் என்கிற மோட்டோ ஸ்போர்ட்ஸில் பெரும் அனுபவமிக்க நபர் அஜித் அணியின் மேனேஜராக செயல்படவிருக்கிறார்.

Ajith

மீண்டும் ரேஸூக்கு திரும்புவதைப் பற்றி அஜித் பேசுகையில், 'ரேஸிங்கில் ஈடுபடும்போது மட்டும்தான் நான் முழுமையானவனாக உணர்கிறேன்.' எனக் கூறியிருக்கிறார்.

Ind Vs Nz: 'திடீரென ஆட்டத்தை நிறுத்திய நடுவர்; அப்செட் ஆன ரோஹித்; என்ன நடந்தது?

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 107 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்திருக்கும் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை வி... மேலும் பார்க்க

Sarfaraz Khan: 'வாய்ப்புங்றது தேவதை மாதிரி..!' - பெங்களூருவில் சாதித்த சர்ப்ராஸூம் பின்னணியும்!

`வாய்ப்புங்றது தேவதை மாதிரி, அது கிடைக்கிறப்ப மதிச்சு ஏத்துக்கனும். இல்லைன்னா எப்பவுமே அது திரும்ப கிடைக்காது.’ சர்ப்ராஸ் கானின் கரியரை இந்த வரிகளுக்குள் அடக்கிவிடலாம். அவருக்கான வாய்ப்புகள் அவருக்கு ... மேலும் பார்க்க

Ind Vs Nz : 'இந்தியாவை எதிர்கொள்ள ரச்சினுக்கு உதவிய சிஎஸ்கே' - என்ன நடந்தது?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 358 ர... மேலும் பார்க்க

Ranji Trophy: 'தமிழக மைதானத்தை கண்டு வியந்த ஜெயதேவ் உனத்கட்' - அசர வைத்த கோவை அசோசியேஷன்

கோயம்புத்தூர் கிரிக்கெட் மைதானத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை கண்டு வியந்து போய் பாராட்டியிருக்கிறார் சவுராஷ்ட்ரா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜெயதேவ் உனத்கட்.கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி முதல் ரஞ்சிக் கோப்ப... மேலும் பார்க்க

Chess : செஸ் விளையாட்டில் கோலோச்சும் இந்தியா; சாம்பியன்களின் தலைநகராகும் தமிழ்நாடு!

பொற்காலம் என்போமே... அப்படியொரு காலத்தில்தான் இந்திய சதுரங்கம் கம்பீரமாகக் கால் பதித்திருக்கிறது.45-வது செஸ் ஒலிம்பியாடில் இந்தியா பொதுப்பிரிவு மற்றும் பெண்களுக்கான பிரிவு என இரண்டிலுமே வென்று வந்திரு... மேலும் பார்க்க