செய்திகள் :

மரண தண்டனைவரை கொண்டு சென்றுள்ள 'ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்' - எச்சரிக்கும் மருத்துவர்

post image

நமக்கெல்லாம் பலவித சிண்ட்ரோம்களைத் தெரியும். அவற்றில் ஒன்றான 'ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்' (shaken baby syndrome) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபருக்கு மரண தண்டனை தரும் அளவுக்கு காரணமாக அமைந்திருப்பது, இன்றைக்கு பேசுபெருளாகியிருக்கிறது.

Robert Roberson

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் ராபர்சன். 2002-ல் உடல் நலம் சரியில்லாத தனது 2 வயது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். சிகிச்சை பலனின்றி இறந்துபோன அந்தக்குழந்தையின் மூளையில் வீக்கம், ரத்தக் கசிவு, கூடவே கண்களிலும் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்ததைக் கண்ட மருத்துவர்கள், அந்தக்குழந்தை 'ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்' மூலம் இறந்திருக்கலாம் என்று காவல்துறையில் புகார் அளித்துவிட்டார்கள். 'குழந்தைக்கு நிம்மோனியா இருந்தது, குற்றம் சாட்டப்பட்டவர் மன இறுக்கத்தில் இருந்தார்' என்று, நடந்த சம்பவத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், 20 வருடங்களுக்கும் மேல் நடைபெற்று வந்த இந்த வழக்கில், ராபர்ட் ராபர்சனுக்கு இன்று விஷ ஊசிப்போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. எனினும் பின்னர் நீதிமன்றத்தால் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

'ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்' ஒரு குழந்தைக்கு மரணத்தை ஏற்படுத்துகிற அளவுக்கு அபாயகரமானதா என்பதை சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா விவரிக்கிறார்.

''குழந்தைகளை தலைக்கு மேலே தூக்கிப்போட்டு விளையாடுகிற பழக்கம் உலகமெங்கும் இருக்கிறது. சிலர் குழந்தைகளை சிரிக்க வைப்பதற்காக குழந்தைகளின் உடலை வேகமாக குலுக்கி விளையாடுவார்கள். செய்பவர்களுக்கு இது விளையாட்டு. ஆனால், பச்சிளம் குழந்தைகள் முதல் ஐந்து மாதம் வரையான குழந்தைகளுக்கு இது அதிகபட்சமாக மரணத்தைக்கூட ஏற்படுத்தலாம்.

டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா

குழந்தைகளைத் தூக்கிப்போட்டு விளையாடும்போது, மூளையானது முன்னும் பின்னும் ஆடும். இதனால், மூளையில் காயம், வீக்கம், ரத்தக்கசிவு போன்றவை ஏற்படும். இதனால், மூளையில் இருக்கிற நரம்புகள் பாதிப்படைந்து, குழந்தைகள் மயக்கமடையலாம். உடல் செயலிழந்துப் போகலாம். கண் பார்வை இழப்பு, வலிப்பு நோய், மனநலக்கோளாறுகள் என பல்வேறு பிரச்னைகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம். அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட குழந்தை மரணமடையவும் வாய்ப்பிருக்கிறது'' என்று எச்சரிக்கிறார் ஃப்ரூக் அப்துல்லா.

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்:https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

மழைக்காலங்களில் அதிகரிக்கும் பஜ்ஜி, போண்டா லவ்... யாரெல்லாம் கவனமா இருக்கணும்?

தலைப்பை படித்ததுமே ’இந்த நேரத்துல இந்தக் கட்டுரை தேவையா’ என்று சிலர் டென்ஷன் ஆகலாம். ஆனால், பலரோட ஆரோக்கியத்துக்காக இதுபற்றி சொல்லியே ஆகணும். மழைக்காலங்களில் அத்தியாவசியமான பொருட்களை விற்பனை செய்யும் ... மேலும் பார்க்க

China: 'கோடியில் ஒரு தாய்' - இரட்டை கருப்பையுடன் ஆண், பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்!

வடமேற்கு சீனாவில் வசிக்கும் ஒரு பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று சர்வதேச செய்தியாகியிருக்கிறார். மிக மிக அரிதான இரட்டைக் கருப்பையுடன் ஒரு ஆண் குழந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றுள்ளதுதான் செய்... மேலும் பார்க்க