செய்திகள் :

`இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள்' - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

post image

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன், ஆளுநர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும் இன்று மாலை நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இத்தகைய அறிவிப்பால், தமிழ்நாட்டு அரசியல் காட்சிகள் பலவும் மீண்டும் மீண்டும் இந்தியைத் திணிப்பதா என மத்திய அரசைச் சாடின.

இந்தி சர்ச்சை

இந்த நிலையில், இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்று நிகழ்ச்சிகள் நடத்துவது மூலம் அம்மாநில மொழிகளை சிறுமைபடுத்தும் செயல் என்றும், அதனைத் தவிர்க்குமாறும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், ``இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளைச் சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது ஒன்றிய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும். மேலும், இந்திய அரசு செம்மொழியாக அங்கீகரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம். இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும்" என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்டாலின் - மோடி

இது தவிர எக்ஸ் தளத்தில் ஸ்டாலின், ``சென்னை தொலைக்காட்சியின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இந்தி மாத நிறைவு விழா கொண்டாடப்படுவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, செம்மொழித் தகுதி பெற்ற அத்தனை மொழிகளையும் கொண்டாட வேண்டும். நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்ற வேண்டும்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``ஆளுநரா ஆரியநரா... தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?" - ஸ்டாலின்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும் இன்று நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானபோதே தமிழக அரசியல் தலைவர்கள் பலரும், இந்திய... மேலும் பார்க்க

Hindi: ``எங்கெங்கு காணினும் இந்தியடா..." - மத்திய பாஜக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன், ஆளுநர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும் இன்று மாலை நடைபெறவிருப்பதாக அறிவிப்பு ... மேலும் பார்க்க

`தமிழகத்தில் இந்தி மாத கொண்டாட்டம்’ - விழாவை நிறுத்த திமுக மாணவரணி போராட்டம்

இந்தி மாத கொண்டாட்டம்!சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள சிவானந்த சாலையில் டி.டி.தமிழ் தொலைக்காட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த சென்னை தொலைக்காட்சியின் பொன்விழா இன்று (18.10.2024) கொண்டாடத் திட... மேலும் பார்க்க

'டிடி தமிழில் இந்தி மாதக் கொண்டாட்டம்' - வலுக்கும் சர்ச்சையும் பின்னிணியும்

தூர்தர்ஷனின் தமிழ் தொலைக்காட்சி பிரிவு பொதிகை என்கிற பெயரில்தான் சேவையை வழங்கி வந்தது. இந்த பெயரை டிடி தமிழ் என மாற்றியது மத்திய அரசு. அதோடு விட்டுவிடாமல் லோகோவையும் காவி நிறத்தில் மாற்றினார்கள். புது... மேலும் பார்க்க

Bomb Threat: `4 நாட்களில் 34 விமான வெடிகுண்டு மிரட்டல்கள்!' - என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?!

'இந்த' பிளைட்டில் 'இங்கே' வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு வாரத்தில், இந்த மிரட்டல் மெசேஜ் அல்லது இமெயில் மூலம் கிட்டத்தட்ட 34 விமானங்களுக்கு வந்துள்ளது. நேற்று மட்டும் 15 விமானங்களுக்கு வெடிகுண... மேலும் பார்க்க