செய்திகள் :

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைக்கு ரூ. 5 லட்சம் தருவதாக பெண்ணிடம் மோசடி: 4 பேர் கைது!

post image

மகாராஷ்டிரத்தில் பெண்ணை ஏமாற்றி நகையைப் பறித்த நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் அக். 12 ஆம் தேதியில் காலையில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்த 59 வயதுடைய பெண் ஒருவரை 4 பேர் வழிமறித்துள்ளனர். பின்னர், அந்தப் பெண்ணிடம் ஒரு பையைக் கொடுத்து, அதில் ரூ. 5 லட்சம் இருப்பதாகக் கூறி, அதனை வைத்துக்கொண்டு, அதற்கு பதிலாக பெண்ணுடைய தங்கச் சங்கிலியை கேட்டுள்ளனர்.

அந்தப் பெண்ணும், தான் அணிந்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை அவர்களிடம் கொடுத்துவிட்டு, பையை வாங்கியுள்ளார். ஆனால், அந்தப் பையில் பணம் இல்லாததை அறிந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இந்த மோசடியில் ஈடுபட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க: தேசிய கீதத்தில் திராவிடத்தை விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா ஆளுநர்? ஸ்டாலின் கேள்வி

இறுதியாக, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட நால்வரையும் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (அக். 18) கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்த 4.5 கிலோ அளவிலான சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான தங்க ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்கள் நால்வரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இதுபோன்ற மோசடிகளில் ஏற்கெனவே ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

ஆர்.ஜி. கர் மருத்துவமனை முறைகேடு: 6 மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பண முறைகேடு விவகாரத்தில் தொடர்புடையதாக மேலும் 6 மருத்துவர்களை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் மு... மேலும் பார்க்க

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது

பாபா சித்திக் கொலை தொடர்பாக மேலும் ஐந்து பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கோ் நகரில் தனது மகனும் எம்எல்ஏவுமான ஸீஷ... மேலும் பார்க்க

தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தா் ஜெயினுக்கு ஜாமீன்

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி 18 மாதங்களாக சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சத்யேந்தா் ஜெயினுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அமைச்சரவையில் சு... மேலும் பார்க்க

பன்னுன் மீது கொலைமுயற்சி: இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா புகார்

அமெரிக்காவில், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி சம்பவத்தில், இந்திய முன்னாள் உளவுத் துறை அதிகாரி விகாஸ் யாதவ்வுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க நீதித்துறை 3 க... மேலும் பார்க்க

தில்லி விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து 45 ஐபோன்கள் பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் பயணிகள் கடத்தி வந்த 45 ஐபோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து தில்லி சுங்கத் துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "வாஷிங்டனில் இருந்து தில்லிக்கு ஏர் ... மேலும் பார்க்க