செய்திகள் :

இலங்கையில் காட்டு யானைகள் மீது மோதி தடம்புரண்ட ரயில்

post image

இலங்கையில் காட்டு யானைகள் மீது மோதிய எரிபொருள் ரயில் தடம்புரண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புக்கு எரிபொருள் ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானைகள் கூட்டம் மீது உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் ரயில் மோதியது.

3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

இதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற 4 டேங்கர்கள் தடம்புரண்டன. மேலும் விபத்தில் இரண்டு யானைகள் உயிரிழந்ததுடன் மேலும் சில படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து காரணமாக ரயில் பாதைகளுக்கும் சேதம் ஏற்பட்டது.

இதனால் கொழும்பு - மட்டக்களப்பு பிரதான பாதையின் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷியா செல்கிறார் பிரதமர்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷிய பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின்... மேலும் பார்க்க

கடந்த 75 ஆண்டுகளில் இருவரும் நிறையவற்றை இழந்துள்ளோம்: இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

இந்தியாவும் பாகிஸ்தானும் வருங்காலங்களில் ஒன்றாக பணியாற்ற விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத் துறை அ... மேலும் பார்க்க

ஹமாஸ் தலைவர் யாஹா சின்வாரின் கடைசி நிமிடங்கள்.. வெளியான விடியோ

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவா் யாஹா சின்வாரின் கடைசி நிமிட விடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் நடைபெற்ற கொடூர தாக்குதல்களின் பி... மேலும் பார்க்க

வாடகைத் தாய் முறைக்கு இத்தாலி முழு தடை

வெளிநாடுகளுக்குச் சென்று வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் இத்தாலி அரசு தனது தடையை விரிவுபடுத்தியுள்ளது.இத்தாலியில் வாடகைத் தாய் முறைக்கு கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்தே தடை உள்ளது. இருந்த... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு

வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.அவரது ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை அடக்... மேலும் பார்க்க