செய்திகள் :

இன்று இனிய நாள்!

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

24-12-2024 செவ்வாய்க்கிழமை

மேஷம்:

இன்று கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9, 3

ரிஷபம்:

இன்று மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மேலிடத்தின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்:

இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும். துன்பங்கள் தீரும். மனக்கவலை அகலும். அடுத்தவரது கருத்தையோ, ஆலோசனையையோ கேட்காமல் உங்களது சொந்த புத்தியால் காரியங்களை செய்வீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்:

இன்று உங்கள் உயர்மட்டத்தில் உள்ள மனிதர்களிடம் தொடர்பு அதிகரிக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 7

சிம்மம்:

இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த காரியங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 6

கன்னி:

இன்று குடும்பத்தில் இருந்து வந்த மனக்கிலேசங்கள் அகலும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் நண்பர்களின் ஆதரவுடன் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். மனதை தளரவிடாமல் இருப்பது வெற்றியை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

துலாம்:

இன்று வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

விருச்சிகம்:

இன்று மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை

அதிர்ஷ்ட எண்: 5, 9

தனுசு:

இன்று நீங்கள் ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். மன குழப்பம் நீங்கும். கடன் பிரச்சனை குறையும். அரசியல்வாதிகளுக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

மகரம்:

இன்று துடிப்புடன் வேகமாக செயலாற்றுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மன குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. சொத்து சம்பந்தமான காரிய தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மை உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1, 3

கும்பம்:

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

மீனம்:

இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2, 6

த்ரிஷா, டோவினோ தாமஸின் புதிய பட டிரைலர்!

நடிகை த்ரிஷா மலையாளத்தில் நடித்துள்ள ஐடென்டிடி டிரைலர் வெளியாகியுள்ளது. மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்கள... மேலும் பார்க்க

பயாஸ்கோப் ரிலீஸ் தேதி!

சத்யராஜ் , சேரன் நடிப்பில் உருவாகியுள்ள பயோஸ்கோப் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயம், நெடும்பா, ஒன் ஆகிய படங்களை இயக்கிய சங்ககிரி ராச்குமார் பயோஸ்கோப் படத்தை இயக்கியுள்ளார். சந்திர சூர்யன், ப... மேலும் பார்க்க

காலையில் வெளியாகும் சூர்யா 44 படத்தலைப்பு டீசர்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா-44 படத்தின் தலைப்புக்கான டீசர் நாளை (டிச.25) காலை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்எழுத... மேலும் பார்க்க

கேல் ரத்னா விருது சர்ச்சை: மௌனம் கலைத்த மனு பாக்கர்!

’கேல் ரத்னா விருதுக்கு நான் தகுதியானவள். ஆனால், அதை நாடு பார்த்துக்கொள்ளும்’ என மனு பாக்கர் கூறியதாக அவரது தந்தை ராம் கிஷன் கூறியுள்ளார்.பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற ஒலிம்பிக் நாயகி மனு பாக... மேலும் பார்க்க

தனுஷுக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்?

நடிகர் தனுஷின் 55-வது படத்தில் நாயகியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. பிக்பாஸ் நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

மின்னல் முரளி நினைவுகளைப் பகிர்ந்த குரு சோமசுந்தரம்!

மின்னல் முரளி படத்தின் 3ஆவது ஆண்டு நினைவுகள் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் நடிகர் குரு சோமசுந்தரம்.தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என 5 மொழிகளில் இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தி... மேலும் பார்க்க