விழுப்புரம் மாவட்டத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்ப...
செல்போன் ரீசார்ஜ் திட்டத்தில் மாற்றம்!
செல்போன் ரீசார்ட் கட்டண விதிகளில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கும் தனியாக ரீசாஜ் செய்துகொள்ளலாம்; இணையத்துக்கும் சேர்த்து ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேவையில்லை என திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
செல்போனில் இணையத்தைப் பயன்படுத்தாதவர்களுக்கு இத்திருத்தம் பயனுள்ளதாக இருக்கும். மேலும், சிறப்பு ரீசார்ஜ் கூப்பன்களில், 90 நாட்களுக்கான வரம்பை நீக்கி, அதை 365 நாட்கள் வரை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நீட்டித்துள்ளது.
இந்தத் திருத்தங்கள், கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும், நாட்டிலுள்ள 15 கோடி 2-ஜி பயனாளர்களுக்கும், இரட்டை சிம் கார்டுகள் பயன்படுத்துவோருக்கும் பயனுள்ளதாக அமையும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் பயனர்கள், தாங்கள் பயன்படுத்தும் சேவைக்கு மட்டும் கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
தற்போது அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இணையம் ஆகிய மூன்றுக்கும் சேர்த்து ரீசார்ஜ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இணையத்துக்கு மட்டும் தனிக் கட்டணம் உள்ளது. ஆனால், குறுஞ்செய்திக்கோ, முடிவில்லா அழைப்புக்கோ தனியாக ரீசார்ஜ் செய்யும் அம்சம் இல்லை.
தற்போது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவந்துள்ள திருத்தங்களின்படி, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி வசதிகளை மட்டும் பயன்படுத்தும் வகையில் தனி ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இணையத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
இணையப் பயன்பாடு தற்போது அதிகரித்துவரும் நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்புவரை அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு தனித்தனியாக ரீசார்ஜ் செய்யும் அம்சம் இருந்தது குறிப்பிடத்தக்கது.