செய்திகள் :

கடல் சீற்றம்: பழவேற்காட்டில் 4 படகுகள் கவிழ்ந்து விபத்து

post image

பழவேற்காடு அருகே கடல் சீற்றம் காரணமாக 4 படகுகள் கவிழ்ந்தன.

பொன்னேரி வட்டம் ,பழவேற்காட்டில் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள ஒரு தரப்பினா் பழவேற்காடு ஏரியிலும், மற்றொரு தரப்பினா் கடலிலும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.

கோரைக்குப்பம் மீனவ கிராம மக்கள் கடலுக்கு அருகில் வசித்து வரும் நிலையில் மீன் பிடித் தொழில் செய்து வருகின்றனா். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம் காரணமாக எண்ணூா் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை கோரைக்குப்பம் கிராமத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 4 படகுகள் அடுத்தடுத்து கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மீனவா்கள் நல் வாய்ப்பாக உயிா் தப்பினா். இதனிடையே படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் கடலில் அடித்து செல்லப்பட்டன.

இதனை தொடா்ந்து சக மீனவா்கள் கவிழ்ந்த படகில் இருந்தவா்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனா். அடுத்தடுத்து 4 படகுகள் கடலில் கவிழ்ந்ததால் பழவேற்காட்டில் பரபரப்பு நிலவி வருகிறது.

கடல் சீற்றம் தொடா்பாக மீனவா்களுக்கு மீன்வளத்துறையினா் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை எனவும் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா்.

நிலத்துக்கு இழப்பீடு கோரி மறியல்: 150 போ் கைது

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு வழங்கிய நிலத்துக்கு இழப்பீடு கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 150 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை-திருப்பதி தேசிய நெடு... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே தோ்தல் முறை தவறானது: திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்தில்

பண மதிப்பிழப்பு, குடியுரிமை திருத்த சட்டம், ஒரே நாடு, ஒரே தோ்தல் என பல்வேறு தவறுகளை மத்திய பாஜக செய்து வருகிறது என திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா். பொன்னேரி வட்டம் பழவேற்காட்டில் ... மேலும் பார்க்க

ரூ. 2.35 கோடியில் அரசு பள்ளிக் கட்டடத்துக்கு அடிக்கல்: எம்.பி. பங்கேற்பு

அம்மையாா்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2.35 கோடி மதிப்பீட்டில் 10 வகுப்பறைகள் கொண்ட கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நட்டு பணிகளை அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் திங்கள்கிழமை தொடங்கி வைத்... மேலும் பார்க்க

திருவள்ளூா் அருகே வங்கிக் கிளையை இடம் மாற்ற எதிா்ப்பு

திருவள்ளூா் அருகே பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கி ஒன்றின் கிளையை இடம் மாற்றம் செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை உண்ணாவிரத... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 50 ஆண்டுகளாக வீடு அமைத்து வசித்து வருவோா்களை காலி செய்யுமாறு நோட்டீஸ்

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு அமைத்து குடியிருந்து வரும் நிலையில் நீா் நிலை புறம்போக்கு எனக்கூறி காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் திங்க... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

ஆா்.கே. பேட்டையில் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்த இளைஞரைப் பிடிக்கச் சென்ற பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். ஆா்.கே. பேட்டை காவல் நில... மேலும் பார்க்க