செய்திகள் :

உதயநிதி ஸ்டாலினை சட்டை அணியச் சொல்லுங்கள்! சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

post image

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது முறைப்படியான ஆடைக் கட்டுபாட்டைக் கடைபிடிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்குரைஞர் சத்யகுமார் தாக்கல் செய்த மனுவில், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையால் வெளியிடப்பட்ட 2019 ஜூன் 1-ஆம் தேதியிட்ட அரசு உத்தரவு எண். 67 இன் படி, அனைத்து அரசு ஊழியர்களும் நேர்த்தியான, சுத்தமான முறைப்படியான உடைகளை உடுத்த வேண்டும் என்று கூறுகிறது. அரசாணையின் படி, ஆண் ஊழியர்கள் தமிழ் கலாசாரம் அல்லது இந்திய பாரம்பரியத்தை பிரிதிபலிக்கும் முறைப்படியான உடைகள்(formal dress) பேண்ட் அல்லது வேஷ்டி (தோட்டி) உடுத்த வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், அனைத்து அரசு நிகழ்ச்சிகளில் டி-சர்ட் அணிந்து வருவதாகவும், தமிழ்நாடு தலைமைச் செயலத்தின் பரிந்துரைக்கப்பட்ட ஆடை குறியீட்டை அமைச்சர் அலுவலகத்திலும், துணை முதல்வர் அறையிலும் அவர் பின்பற்றாமல் இருப்பதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சிறைகளில் 84 பிரபல ரௌடிகளை 1987 முறை சந்தித்த 396 வழக்குரைஞர்கள்!

உதயநிதியின் டி-ஷர்ட்களில் பெரும்பாலும் திமுகவின் சின்னம் இருக்கும் என்றும், மக்கள் பணியாளர் என்ற முறையில் அவர் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சின்னம் கொண்ட உடையை உடுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

உதயநிதியின் செயல்கள் அரசியலமைப்புக்கு எதிரானது, சட்டவிரோதமானது, சட்டத்திற்கு புறம்பானது மற்றும் அரசாணைக்கு எதிரானது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், முறைப்படியான ஆடைக் குறியீட்டைக் கடைப்பிடிக்குமாறு உதயநிதிக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது: பியூஷ் கோயல்

புதுதில்லி : நாட்டின் அடிப்படை வலுவாக உள்ளதால், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், பியூஷ் கோயல் தெரிவித்தார்.இது குறித்து ப... மேலும் பார்க்க

ஆளுநர் பங்கேற்ற ஹிந்தி விழாவில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' சர்ச்சை!

சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி பாடப்படவில்லை என சர்ச்சை கிளம்பியுள்ளது. சென்னையில் டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாக்கெட் சாராயத்துக்கு மீண்டும் தடை!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள சாராயக்கடைகளில் பாக்கெட்டில் சாராயம் அடைத்து விற்பனை செய்ய கலால் துறை தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழல் துறையின் உத்தரவு பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பு... மேலும் பார்க்க

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணைய தலைவர் நியமன வழக்கு: விசாரணை அக். 25-க்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநரை நியமித்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்குரைஞர் பிரிவு அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீத... மேலும் பார்க்க

சிறைகளில் 84 பிரபல ரௌடிகளை 1987 முறை சந்தித்த 396 வழக்குரைஞர்கள்!

கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 20 வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 84 பிரபல ரெளடிகளை 396 வழக்குரைஞர்கள் 1987 முறை சந்தித்தத்தாக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் நிலவும் ஆபத... மேலும் பார்க்க