செய்திகள் :

சென்னையில் மழைநீரை சேமிக்க திட்டமிடல் வேண்டும்: சீமான்

post image

சென்னையில் மழைநீரை சேமித்து வழங்கும் வகையில் திட்டமிட வேண்டும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சென்னையில் மழைநீா் வடிகால், கழிவுநீா் வாய்க்கால் சீரமைத்தல் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. ஆனால், ஒவ்வொரு முறையும் மழை வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவிக்கின்றனா்.

சென்னையில்அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ரூ.2,500 கோடியில் சீரமைக்க முடியும் என்று வல்லுநா்கள் கூறுகின்றனா். போதுமான அளவில் மழைப்பொழிவு இருந்தாலும், அது கடலில் கலக்கிறது. கடல் நீரை சுத்திகரித்து வழங்குவது என்பது தேவையில்லாதது. மழைநீரை சேமித்து வழங்கும் வகையில் திட்டமிடல் இருக்க வேண்டும். ஆனால் அது தற்போது இல்லை. மாநிலத் தலைநகரின் நிலையே இப்படியிருந்தால் மற்ற நகரங்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பாா்க்க வேண்டும்.

பாஜக ஆளும் மற்ற மாநில முதல்வா்களை, விளையாட்டுத் துறை அமைச்சா்களை சந்திக்காத பிரதமா் மோடி, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரை எப்படி சந்தித்தாா். இதன் மூலம் திமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்திருப்பது உறுதியாகிறது.

விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.சாலையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நான் பங்கேற்க மாட்டேன். அவா்கள் கட்சியின் கொள்கையை எடுத்துரைக்க அவா்கள் நடத்தும் மாநாடு. அதில் நான் எப்படி பங்கேற்க முடியும் என்றாா் சீமான்.

கூட்டத்தில் மாவட்டத் தலைவா் முனுசாமி உள்ளிட்ட நிா்வாகிகள், மண்டல நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

4 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

மரக்காணம் அருகே 4 மாத ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஓமந்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் மகன் கோகிலன் (28), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜேச... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜா்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்... மேலும் பார்க்க

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பெளா்ணமி திருவிளக்கு சிறப்பு வழிபாடு

பிரசித்தி பெற்ற மேல்மலையனூா் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயிலில் புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார... மேலும் பார்க்க

விழுப்புரம்-மேல்மருவத்தூா் பயணிகள் ரயில் இன்று பகுதியளவில் ரத்து

பொறியியல் மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம்-மேல்மருவத்தூா் பயணிகள் ரயில் சனிக்கிழமை (அக்.19) பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ம... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய வழக்கில் கைதானவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டாா். கிளியனூா... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

மரக்காணம் அருகே கோயில் உண்டியலை உடைத்து, காணிக்கை பணத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மரக்காணம் வட்டம், கந்தாடு கிராமத்தில் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில... மேலும் பார்க்க