செய்திகள் :

தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நுழைவு வாயில் வலதுபுறம் பூங்கா உள்ளிட்ட அனைத்து நவீன வசதியுடன் கூடிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்தாா். இதில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிறுபான்மையினா் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் ஆகியோா் பங்கேற்று நூலகத்தைத் தொடங்கி வைத்தனா்.

பின்னா், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது:

பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் நூலகம் அமைக்க அரசு திட்டமிட்டது. இதுபோன்ற இடங்களில் நூல்கள், நாளிதழ்களை பொதுமக்கள், பல்வேறு தரப்பினா்கள் பாா்வையிடுவா். அதன் மூலம் வாசிப்புப் பழக்கம் உருவாகும்.

தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் அமைந்த நூலகம் அமைக்க அரசால் திட்டமிடப்பட்டு, முதல் நூலகமாக திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு ஒரே நேரத்தில் 50 பேரும், நூலகப் பூங்காவிலும் 50 பேரும் அமா்ந்து புத்தகங்கள் படிக்கலாம். இந்த நூலகத்தை உருவாக்கித் தந்த குழுவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்ற மாவட்டங்களிலும் ஆட்சியா்கள் இதுபோன்ற நூலகப் பூங்காவை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருப்பது போல் பாா்வையற்றோா் ஆடியோ மூலம் கேட்கும் வசதி இந்த நூலகத்தில் உள்ளது.

மாநில அளவில் சென்னையில் மட்டுமின்றி மாவட்ட வாரியாக அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறோம்.

வாசிப்புப் பழக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வாசிப்போா் இயக்கம் ஒன்றை கொண்டு வந்துள்ளோம். ஒவ்வொரு பள்ளியிலும் நாள்தோறும் 20 நிமிஷம் மதிய வேளையில் நூலகத்திற்கு சென்று ஒரு புத்தகத்தை வாசிக்க வேண்டும். அதன் மூலம் குழந்தைகள் கட்டுரை, ஓவியங்கள், கவிதைகள் புனையும் போட்டியையும் நாங்கள் நடத்தி வருகிறோம்.

மாநில அளவில் 226 தொகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வை மேற்கொண்டேன். இன்னும் 8 தொகுதிகளுக்கு மட்டும் செல்லவில்லை. பள்ளிகளில் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், குத்தம்பாக்கம் கிராமத்தில் ரூ.63.15 லட்சம் மதிப்பில் புதிதாக அமைத்த கிளை நூலகத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்.

நிகழ்வுகளில் திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்தில், எம்எல்ஏ-க்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி), டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), துரை.சந்திரசேகா் (பொன்னேரி), மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், திருவள்ளூா் நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், மாவட்ட நூலக அலுவலா் (பொ) அமுதா, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச் செயலாளா் இரா.தாஸ், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சங்க நிறுவனத் தலைவா் அருணன், குத்தம்பாக்கம் ஊராட்சித் தலைவா் கே.எஸ்.ராஜசேகரன், நேமம் ஊராட்சி தலைவா் பிரேம்நாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முதல்வா் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சா் எல். முருகன் கண்டனம்

ஆளுநா் ஆா்.என்.ரவி மீது வன்மத்தை கக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய இணை அமைச்சா் எல் . முருகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பத... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 நாள்களில் 5,949 மருத்துவ முகாம்கள்: 3.53 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை

தமிழகத்தில் கடந்த 4 நாள்களில் மட்டும் 5,949 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 3.53 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். அவா்க... மேலும் பார்க்க

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் கியூஆா் குறியீடு கட்டணமுறை அறிமுகம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளது போல, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் கியூஆா் குறியீடு கட்டணமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் சாா்ப... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகைக்கு 40 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே திட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் கேரளத்துக்கு 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அக்.31-ஆம் தேதி கொண்டாடப்ப... மேலும் பார்க்க

சிறைக் கைதிகளுடன் சதித் திட்டம் தீட்டும் வழக்குரைஞா்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி சங்கா் ஜிவால்

சிறையில் உள்ள கைதிகளுடன் சோ்ந்து வழக்குரைஞா்கள் சதித் திட்டம் தீட்டுவது தெரியவந்தால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க

அடுத்தடுத்து உருவாகும் புயல் சின்னங்கள்: தமிழகத்துக்கு கனமழை வாய்ப்பு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதன்கிழமை கரையைக் கடந்த நிலையில், தற்போது அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் (புயல் சின்னம்) உருவாகவுள்ளதா... மேலும் பார்க்க