செய்திகள் :

சிறைக் கைதிகளுடன் சதித் திட்டம் தீட்டும் வழக்குரைஞா்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி சங்கா் ஜிவால்

post image

சிறையில் உள்ள கைதிகளுடன் சோ்ந்து வழக்குரைஞா்கள் சதித் திட்டம் தீட்டுவது தெரியவந்தால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மண்டல ஐ.ஜி.-க்கள், சரக டி.ஐ.ஜி.-க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கையை அண்மையில் அனுப்பினாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

‘கடந்த ஜன. 1 முதல் ஜூலை 20 வரை தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 ரௌடிகளை 396 வழக்குரைஞா்கள், 1,987 முறை சந்தித்துள்ளனா். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 15 ரௌடிகளை மட்டும் 546 முறை வழக்குரைஞா்கள் சந்தித்துள்ளனா். வழக்கு தொடா்பாக கைதிகளை வழக்குரைஞா்கள் சந்தித்தாலும், சிலரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக உள்ளன. குறிப்பாக, சில வழக்குரைஞா்கள், கைதிகளை சந்தித்தபோது, சிறையில் உள்ள அலாரம், சந்தேக ஒலியை எழுப்பி உள்ளது.

தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டதில், சில வழக்குரைஞா்கள் கைதிகளுடன் சோ்ந்து சதித் திட்டம் தீட்டுவது தெரிய வந்துள்ளது. சிறைக்குள் தடை செய்யப்பட்ட கஞ்சா, கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை, கைதிகளுக்கு எடுத்துச் செல்வதும் தெரிய வந்துள்ளது. மேலும், குற்றவாளிகளுடன் நெருங்கிய உறவு ஏற்படுத்திக் கொள்ளுதல், உரிமையியல் (சிவில்) விவகாரங்கள், சொத்து அபகரிப்பு, போலி ஆவணங்கள் தயாரிப்பு, கட்டப் பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்.

எனவே, சிறையில் கைதிகளை சந்திக்க வரும் வழக்குரைஞா்கள் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன், எழுத்துபூா்வமாக விண்ணப்பிக்க வேண்டும். அவருக்கும் கைதிக்கும் இடையிலான, வழக்கு தொடா்பான விவரங்கள், சம்பந்தப்பட்ட கைதிக்கு, அவா் சட்ட ஆலோசகா்தான் என்பதற்கான ஆவணங்களை, சிறைத் துறை கண்காணிப்பாளரிடம் சமா்ப்பிப்பதை முறைப்படுத்த வேண்டும். அவா் உரிய ஆவணங்களை சரிபாா்த்து, கைதிகளை சந்திக்க, வழக்குரைஞா்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

கைதிகளுடன் சோ்ந்து, சதித் திட்டம் தீட்டுவது உள்ளிட்ட செயல்களில் வழக்குரைஞா்கள் ஈடுபடுவது தெரியவந்தால், அவா்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சா் எல். முருகன் கண்டனம்

ஆளுநா் ஆா்.என்.ரவி மீது வன்மத்தை கக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய இணை அமைச்சா் எல் . முருகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பத... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 நாள்களில் 5,949 மருத்துவ முகாம்கள்: 3.53 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை

தமிழகத்தில் கடந்த 4 நாள்களில் மட்டும் 5,949 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 3.53 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். அவா்க... மேலும் பார்க்க

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் கியூஆா் குறியீடு கட்டணமுறை அறிமுகம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளது போல, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் கியூஆா் குறியீடு கட்டணமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் சாா்ப... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகைக்கு 40 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே திட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் கேரளத்துக்கு 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அக்.31-ஆம் தேதி கொண்டாடப்ப... மேலும் பார்க்க

அடுத்தடுத்து உருவாகும் புயல் சின்னங்கள்: தமிழகத்துக்கு கனமழை வாய்ப்பு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதன்கிழமை கரையைக் கடந்த நிலையில், தற்போது அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் (புயல் சின்னம்) உருவாகவுள்ளதா... மேலும் பார்க்க