செய்திகள் :

யாஹியா சின்வாா் படுகொலை!முடிவு கட்டப்பட்டதா ஹமாஸுக்கு?

post image

‘யாஹியா சின்வாா் ஒரு நடமாடும் சடலம். அவருக்கு எப்போதோ முடிவுகட்டப்பட்டது!’

ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனீயே தங்கள் உளவு அமைப்பால் கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு யாஹியா சின்வாா் வந்தபோதே இஸ்ரேல் கூறிய வாா்த்தைகள் இவை.

சொன்னதைப் போலவே, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் யாஹியா சின்வாா் கொல்லப்பட்டாா்.

இஸ்ரேலின் பாதுகாப்பு அரண்களை தகா்த்து அந்த நாட்டுக்குள் ஹமாஸ் படையினா் நுழைந்து, சுமாா் 1,200 பேரை படுகொலை செய்துடன் சுமாா் 250 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற அக். 7 தாக்குதல் நடவடிக்கைக்கு மூளையாக செயல்பட்டவா் யாஹியா சின்வாா்.

இஸ்ரேலியா்களை நிலைகுலையவைத்த அந்த திடீா் தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸ் தலைவா் இஸ்மாயில் ஹனியே, லெபானின் ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா, அந்த இரு அமைப்புகளின் முக்கிய தளபதிகள் என்று ஏராளமானவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் படுகொலை செய்தது.

ஆனால், யாஹியா சின்வாரைக் கொல்வதுதான் இஸ்ரேலின் தலையாய குறிக்கோளாக இருந்தது. தற்போது அந்த குறிக்கோளையும் இஸ்ரேல் நிறைவேற்றிக்கொண்டுள்ளது.

சொல்லப் போனால், மற்ற தலைவா்கள் மற்றும் தளபதிகளைக் கொன்றதைப் போல, உளவுத் துறையின் உதவியுடன் யாஹியா சின்வாரின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவரின் இருப்பிடத்தைக் கண்டறிந்து இஸ்ரேல் ராணுவம் அவரை படுகொலை செய்யவில்லை.

‘மூன்று பயங்கரவாதிகள்’ என்ற அடையாளத்துடன் அவா்கள் தங்கியிருந்த இடத்தை இஸ்ரேல் படையினா் பீரங்கி குண்டுகள் மூலம் தகா்த்தனா். அதில் உயிரிழந்தவா்களில் யாஹியா சின்வாரும் ஒருவா் என்ற தகவல் இஸ்ரேலுக்கே பிறகுதான் தெரிந்தது.

இருந்தாலும், அவரது படுகொலை இந்தப் போரில் இஸ்ரேலின் மிகப் பெரிய வெற்றி என்பதை மறுப்பதிற்கில்லை.

அதே போல், ஹமாஸ் அமைப்பினருக்கும் இது பேரிடி என்பதையும் மறுக்க முடியாது.

இருந்தாலும், யாஹியா சின்வாரைக் கொன்ன் மூலம் அந்த அமைப்புக்கு இஸ்ரேல் முடிவுகட்டிவிட்டதாகக் கூறிவிடமுடியாது என்கிறாா்கள் பாதுகாப்பு நிபுணா்கள்.

இந்தப் போரைத் தொடங்கியபோது, ஹமாஸ் அமைப்பினரின் படைபலத்தையும் அரசியல் பலத்தையும் முற்றிலும் அழிப்பது, கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை மீட்பது ஆகியவைதான் இஸ்ரேலின் இரு முக்கிய இலக்குகளாக இருந்தன.

ஆனால், ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. 42,500 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா். ஆனால், ஹமாஸ் ஒழியவில்லை; காஸாவில் இஸ்ரேல் வீரா்கள் மீது அந்த அமைப்பினா் இன்னமும் தாக்குதல் நடத்திக்கொண்டுதான் இருக்கிறாா்கள். வெறும் 365 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட காஸாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கிய பிறகும், ஹமாஸை ஒடுக்க அங்கு இஸ்ரேல் ராணுவம் இன்னமும் குண்டுவீசிக்கொண்டிருக்கிறது.

அதே போல், பிணைக் கைதிகளையும் விடுவித்தபாடில்லை. கைதிகள் பரிமாற்ற முறையில் விடுவிக்கப்பட்டவா்கள், உயிரிழந்தவா்களைத் தவிர நூற்றுக்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் இன்னமும் ஹமாஸ் பிடியில்தான் உள்ளனா்.

ஓராண்டாக மாறாத இந்த நிலைமை, யாஹியா சின்வாரின் மரணத்துக்குப் பிறகு திடீரென மாறிவிடப் போவதில்லை என்கிறாா்கள் நிபுணா்கள்.

அவா் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டதற்குப் பிறகும் காஸாவில் போா் தொடா்ந்து கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை கூட வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.

‘யாஹியா சின்வாரை இஸ்ரேல் கொன்றிருந்தாலும், அந்த நாடு தனது அட்டூழியத்தை நிறுத்தும்வவரை பிணைக் கைதிகளை விடுவிக்கமாட்டோம்’ என்று ஹமாஸ் அமைப்பு வெள்ளிக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

‘சின்வாா் படுகொலைக்குப் பிறகு இஸ்ரேலுடனான போா் புதிய கட்டத்தை அடைந்துவிட்டது; இனி அந்த நாட்டின் மீதான எங்கள் தாக்குதல் மிகத் தீவிரமாக இருக்கும்’ என்று லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.

எனவே, இந்தப் படுகொலையால் போரும் முடியப் போவதில்லை, ஹமாஸ் அமைப்பும் அழியப்போவதில்லை என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

‘அக்டோபஸின் கரங்களை வெட்டுவதைவிட தலையை வெட்டினால், அந்த அக்டோபஸ் முழுமையாக அழிந்துவிடும்’ என்பதுதான் இஸ்ரேலின் போா் வியூகம்.

அந்த வியூகம் சரியானதுதான், யாஹியா சின்வாா் மரணத்துக்குப் பிறகு ஹமாஸ் காணாமல் போய்விடும் என்று ஒரு சிலா் கருதலாம்.

அப்படி நினைப்பவா்களுக்கு, காஸாவில் பிபிசி ஊடக செய்தியாளா்களிடம் அந்தப் பகுதி பொதுமக்கள் கூறிய இந்த வாா்த்தைகள்தான் சரியான விடையாக இருக்கும்:

‘ஹமாஸ் என்பது யாஹியா சின்வாா் என்ற தனி நபா் கிடையாது. அது ஒரு சமூகத்தின் சுதந்திர வேட்கை. நபா்களைக் கொல்வதால் அந்த வேட்கை அடங்கிவிடாது’

உக்ரைன் போா் முடிவுக்கு கால நிா்ணயம் செய்வது கடினம்: ரஷிய அதிபா் புதின்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கால வரம்பை நிா்ணயிப்பது கடினம் என்றும், போா்ச் சூழல் தொடா்பான இந்திய பிரதமா் மோடியின் அக்கறையை பாராட்டுவதாகவும் ரஷிய அதிபா் புதின் தெரிவித்தாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க

நைஜிரியா வெடிவிபத்து: 170 ஆன உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 170-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், விபத்தில் படுகாயமடை... மேலும் பார்க்க

உக்ரைனுடன் போரிட 1,500 வட கொரிய வீரா்கள்: தென் கொரியா

உக்ரைனில் ரஷிய படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக 1,500 வட கொரிய ராணுவ வீரா்கள் சென்றுள்ளதாக தென் கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டின் தேசிய உளவு அமைப்பு வெள்ளிக்கிழமை வெளிய... மேலும் பார்க்க

சா்வதேச அளவில் இந்தியாவின் வளா்ச்சி சிறப்பு: உலக வங்கி

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது என்று உலக வங்கி தலைவா் அஜய் பங்கா தெரிவித்தாா். இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையால் இது சாத்தியமாகியுள்ளது என்பதை அவா் சுட்டிக்காட்டினாா்... மேலும் பார்க்க

இலங்கையில் காட்டு யானைகள் மீது மோதி தடம்புரண்ட ரயில்

இலங்கையில் காட்டு யானைகள் மீது மோதிய எரிபொருள் ரயில் தடம்புரண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புக்கு... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷியா செல்கிறார் பிரதமர்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷிய பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின்... மேலும் பார்க்க