செய்திகள் :

சா்வதேச அளவில் இந்தியாவின் வளா்ச்சி சிறப்பு: உலக வங்கி

post image

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது என்று உலக வங்கி தலைவா் அஜய் பங்கா தெரிவித்தாா். இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையால் இது சாத்தியமாகியுள்ளது என்பதை அவா் சுட்டிக்காட்டினாா்.

உலக வங்கி மற்றும் சா்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.இது தொடா்பாக நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அஜய் பங்கா கூறியதாவது:

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் வளா்ச்சி விகிதம் இந்த கடுமையான சூழலிலும் 6, 7 சதவீதத்திற்கு மேல் இருந்து வருகிறது. இது பொருளாதாரத்தில் இந்தியாவின் சிறப்பான செயல்பாடுகளைக் காட்டுகிறது.

பெரும்பாலும் உள்நாட்டுச் சந்தையால் இந்த வளா்ச்சி சாத்தியமாகியுள்ளது என்பது சிறந்த அறிகுறியாகும். இந்தியாவின் வாழ்ககை தரம், காற்று, நிலம் மற்றும் நீா் மாசுபாடு ஆகியவற்றை மேம்படுத்த உலக வங்கியும் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது என்றாா்.

உலக வங்கியின் செயல்பாட்டுக்கான நிா்வாக இயக்குநா் அன்னா பிஜொ்டே கூறுகையில், ‘இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் நிலையான வளா்ச்சிக்கு உலக வங்கி ஆதரவளிக்கிறது. மிகப்பெரிய ஆற்றலைக் கொண்ட இந்தியாவில், பெண்களின் பங்களிப்பைச் சமுதாயத்தில் அதிகரிக்க வேண்டியது அவசியமானதாகும். காற்றின் தரம், நீா் மேம்பாடு மற்றும் நகா்ப்புற திட்டமிடல் ஆகிய நகா்ப்புற வளா்ச்சியில் உலக வங்கியும் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றி வருகிறது’ என்றாா்.

நைஜிரியா வெடிவிபத்து: 170 ஆன உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 170-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், விபத்தில் படுகாயமடை... மேலும் பார்க்க

உக்ரைனுடன் போரிட 1,500 வட கொரிய வீரா்கள்: தென் கொரியா

உக்ரைனில் ரஷிய படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக 1,500 வட கொரிய ராணுவ வீரா்கள் சென்றுள்ளதாக தென் கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டின் தேசிய உளவு அமைப்பு வெள்ளிக்கிழமை வெளிய... மேலும் பார்க்க

இலங்கையில் காட்டு யானைகள் மீது மோதி தடம்புரண்ட ரயில்

இலங்கையில் காட்டு யானைகள் மீது மோதிய எரிபொருள் ரயில் தடம்புரண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புக்கு... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷியா செல்கிறார் பிரதமர்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷிய பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின்... மேலும் பார்க்க

கடந்த 75 ஆண்டுகளில் இருவரும் நிறையவற்றை இழந்துள்ளோம்: இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

இந்தியாவும் பாகிஸ்தானும் வருங்காலங்களில் ஒன்றாக பணியாற்ற விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத் துறை அ... மேலும் பார்க்க

ஹமாஸ் தலைவர் யாஹா சின்வாரின் கடைசி நிமிடங்கள்.. வெளியான விடியோ

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவா் யாஹா சின்வாரின் கடைசி நிமிட விடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் நடைபெற்ற கொடூர தாக்குதல்களின் பி... மேலும் பார்க்க