செய்திகள் :

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷியா செல்கிறார் பிரதமர்!

post image

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷிய பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின் அழைப்பின் பேரில் ரஷியாவின் கசானில் நடைபெற உள்ள 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். தனது பயணத்தின்போது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார்.

இதையும் படிக்க: வேலூர் உள்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழை!

முக்கியமாக இந்தாண்டு உச்சி மாநாட்டில் உலகளாவிய சமூகத்தைப் பாதிக்கும் முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. முக்கியமான சர்வதேச பிரச்னைகளில் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாடு மூலம் முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியத்தைக் கண்டறிவதற்கும் உச்சி மாநாடு நல்லதொரு வாய்ப்பை வழங்கும் என அமைச்சகம் கூறியுள்ளது.

முன்னதாக கடந்த 2023-ஆம் ஆண்டுக்கான 15-வது உச்சி மாநாடு தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சா்வதேச அளவில் இந்தியாவின் வளா்ச்சி சிறப்பு: உலக வங்கி

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது என்று உலக வங்கி தலைவா் அஜய் பங்கா தெரிவித்தாா். இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையால் இது சாத்தியமாகியுள்ளது என்பதை அவா் சுட்டிக்காட்டினாா்... மேலும் பார்க்க

இலங்கையில் காட்டு யானைகள் மீது மோதி தடம்புரண்ட ரயில்

இலங்கையில் காட்டு யானைகள் மீது மோதிய எரிபொருள் ரயில் தடம்புரண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புக்கு... மேலும் பார்க்க

கடந்த 75 ஆண்டுகளில் இருவரும் நிறையவற்றை இழந்துள்ளோம்: இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

இந்தியாவும் பாகிஸ்தானும் வருங்காலங்களில் ஒன்றாக பணியாற்ற விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத் துறை அ... மேலும் பார்க்க

ஹமாஸ் தலைவர் யாஹா சின்வாரின் கடைசி நிமிடங்கள்.. வெளியான விடியோ

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவா் யாஹா சின்வாரின் கடைசி நிமிட விடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் நடைபெற்ற கொடூர தாக்குதல்களின் பி... மேலும் பார்க்க

வாடகைத் தாய் முறைக்கு இத்தாலி முழு தடை

வெளிநாடுகளுக்குச் சென்று வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் இத்தாலி அரசு தனது தடையை விரிவுபடுத்தியுள்ளது.இத்தாலியில் வாடகைத் தாய் முறைக்கு கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்தே தடை உள்ளது. இருந்த... மேலும் பார்க்க